பிரியங்கள் என்பது வெறும் பரிசுகள் அல்ல!
பிறந்தநாள் வாழ்த்துக்களும் கட்டாயமல்ல!
என் பிறந்தநாளில் தங்கள் அன்பை வாழ்த்துக்களாய்
சொன்ன அத்தனைபேருக்கும் நன்றி!
இந்நாள் முழுதும் வாழ்த்துக்கலாள் நிறைந்திருக்க,
என் வாழ்நாள் முழுதும் நிறையும் இணையொன்று சொல்ல எதுமற்ற பேரன்பை
பரிசாய் தந்தான் என் மகன்,
இன்றும் நேற்றை போலவே, நாளையை போலவே என்பதை ஏற்று கொள்ளாதவன் அவன்
எல்லா குழந்தைகளை போல,
அவனை பொறுத்தமட்டில் பிறந்தநாள் என்பது எல்லா வகையிலும் சிறந்தநாள்!
வாழ்த்த மறந்த நட்புகள், உறவுகள் அத்தனை பேருக்கும் phone செய்து நினைவூட்டினான்,
வாழ்த்தக்களும், அன்புமே என்னை மகிழ்விக்கும் என்று பெருநம்பிக்கை கொண்டிருந்தான்!
அவனாய் மெனக்கெட்டு நேற்று செய்த பரிசொன்று தந்தான்!
என்னை புத்தாடை அணிய சொல்லி,
இல்ல பணிகளிருந்து தற்காலிக விடுப்பு எடுக்க கட்டாயபடுத்தி,
தங்கையை இன்று முழுவதும் அவனே பேணபோவதாய் வாக்குறுதி தந்து,
கடைசியாய் இந்த புகைப்படத்திற்கு என்னை திருத்தி,
என் பிள்ளையின் இந்த பிரியத்தை, அன்பை, அக்கறையை தவிர வேறென்ன பரிசு
வேண்டும் இந்நாளில்,
இப்படியாக என் பிறந்த நாள் முடிந்தது
நான் பிறந்ததின் பொருள் உணர்த்தி!





Comments
Post a Comment