Skip to main content

Posts

Showing posts from February, 2022

தேடிப்பிடித்திட இயலா புதிர்

 பெரு விளக்கங்கள் தேவை இல்ல.. காதலுக்கு.. தேடிப்பிடித்திட இயலா புதிர் இது.. தன் கர்வம் துறந்த நொடி தோன்றும், ஆச்சரியம்.... வெறும் பொருட்களால் நிறைந்த உலகம், காதல் கொஞ்சம் சேர்த்தால், பிரியங்களால் அழகாய் கட்டமைக்க பட்டிருப்பது தெரியும்.. சிறு காதல் போதும்.. உன்னை சுற்றும் உலகம் கவிதையாய் தெரிய.. திட்டமெல்லாம் வேலையின் உச்சம் தொட மட்டுமே.. திட்டமிடா ஒரு காதல் வாழ்வின் மோட்சம் சொல்லும்.. திகில் கனவுகளை விரட்ட, காதல் செய்வது சிறந்த வழி... கோபம், பொறாமை, பொய், காமம், வேர்வை, முத்தம் இது எல்லாம் தான் காதலின் புனிதம்.... காதல் செய்... புனிதமடைவாய்....