Skip to main content

Posts

Showing posts from June, 2021
செய்முறை விளக்கங்கள் எத்தனை கேட்டாலும் , செய்யும் பொழுதுகளில் எல்லாம் கொஞ்சம் இடரத்தான் செய்கிறது!  
  அட்டு, மொக்கை என்று தமிழ் பேசி பழகிவிட்ட நமக்கு இல்லம், பகிர்வு, உறக்கம் என்று அழகுத்தமிழில் பேசினாலே கவிதை என்றாகி விட்டது!
  மை கொஞ்சமும் காதல் நிறையவும் கசியும் என் கண்களை பார்! அதை காட்டிலும் காதல் அட்டைகள் ஒன்றும் அதனை நுட்பமாய் என் காதல் சொல்லி விடபோவதில்லை ! காதலர் தின வாழ்த்துக்கள் !!!
  ஒற்றை எழுத்தால் குரலெடுத்து ஆ என்றாய் ஊ என்றாய், சுற்றம் இருப்பவரோ அதை, வெறும் சத்தம் என்றே எண்ணியிருக்க , எழுத்தொன்றும் சொல்லாகும் அற்புதம் அது உன் மழலை மொழி என்றறிவேன் நான் மட்டும் ! " யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் " என்றான் பாரதி . மகளே உன் மொழி அறியாமல் போனதனால் !
  #பிரசவம் #Delivery வலி கண்டதாய் சொல்லி பிரசவச அறையில் கிடத்துகிறார்கள். எப்படி வலி என்ற இரெண்டெழுத்து மட்டும் இதற்கு பொருந்தும் என்று தெரிய வில்லை, நடு எலும்பிற்கு கீழே நடக்கும் மாற்றங்கள் அத்தனை தாங்க தக்கவையாக இராது, முனகலும் கதறலும் செவிலிகள் காதுகளுக்கு கேட்காது,. இதோ இன்னும் பத்து நிமிடம் என்று ஒவ்வொரு 10 நிமிடதிற்கும் பொய் வாக்குறுதிகள் கொடுப்பார்கள் ஆயாக்கள், உள்ளங்கைகளை பிரியமானவர்கள் பற்றி கொண்டால் நல்லது என்றிருக்கும், இதன் நடுவே பனிக்குட நீரும் குருதியுமான ஈர பிசுபிசுப்பில் வேறு படுக்கவேண்டியதாகி போகும், தலை தெரிவதாய் மருத்துவர் முக்க சொல்கிறார் அய்யோ !முனங்கவும் ! வலுவற்ற நிலையில் , அம்மா !என்று அலறி இறந்து போனேனா என எண்ண துவங்கும் வேளையில், பிறந்திருக்கும் என் மகவு அழ திராணிற்று இருக்கும் எனக்கு பதிலாய் அழுது கொண்டே !
பணி பெண் ஒருத்தி !!!!!!!!!!!!!!!!!! முழுவதுமாய் உலராமல் ஈரம் படிந்த கூந்தலுடன் பணிக்கு ஆயத்தமாவாள், அமர்ந்திருக்கும் அழகு பெண்ணின் முடி உலர்த்த, அது முடிந்து புருவம் திருத்துகிறாள் மாறி மாறி ,ஆடி கொடுத்து ஒப்புதல் பெற சரியென்பவர் எவருமிருப்பதில்லை, திருத்தம் சொல்ல மீண்டும் திருத்துவாள், அதன் பிறகு அறையடி கூந்தலை காலும் அறையுமாக்குவாள் கூந்தலை முடியா சபதமேற்ற பெண்களுக்கு, இடை இடையே அவள் நிறுவன தயாரிப்புகளுக்கு இவளே விளம்பர நிர்வாகியாகி விற்பனைக்கு மெனக்கெடுவாள் ப்ளீச் என்போரிடம் கூடவே பேசியலுக்கும், வேக்ஸ்ங் செய்வோரிடம் பெடி-க்யூர்-க்கும் சிபாரிசு செய்து வந்திருக்கும் பெண்ணின் அழகுக்கும், அவள் முதலாளியின் லாப கணக்கிற்கும் பாடுபடுவாள், இரவின் முகப்பில் இறுக்கி பிடித்த ஜீன்ஸ் பேண்ட களைந்து சுடிதார் துப்பட்டாவிற்கு மாறி இப்போது காய்ந்திருக்கும் தலையை பின்னி முடித்து அலங்காரம் கலைத்து வீடு திரும்புவாள் அழகு நிலைய பணி பெண் ஒருத்தி !!!!!!!!!!!!!!!!!!  
  ஆண்களாய் இருப்பது ................... அடக்கவேண்டிய அவசியமேதும் இருப்பதில்லை , தோன்றும் கணத்தில் கழிக்கலாம் தெரு ஓரங்களில் கூட, கூட்ட நெரிசலில் வேர்த்து போனால் கவலை இல்லை சட்டபொத்தான்களை கழற்றினால் போதும் காற்று வாங்க , அடை மழையில் நனைய நேரிட்டால், ஒதுங்கும் கடைகளில் குளிருக்கு இதமாய் தேநீர் பருகலாம், ஒப்புதல் எதுவும் தேவையில்லை நண்பனின் அறைக்கு நடுநிசியில் போக, தலைவலியோடு வீடு திரும்புகையில் சூடான காபி கிடைக்கும் வலியின் வீரியம் குறைக்க , அவசரங்களில் அடுக்கிய சட்டைகளை கலைத்தால் பரவாயில்லை திரும்ப அடுக்க அவசியமேதுமில்லை மேல்சட்டை அணியாமல் இருந்தால் போதும் முற்றும் துறந்தவனென தெரிவிக்க, வாந்தி, மயக்கம், வலிகள் எதுமின்றி பிள்ளைகள் பெயரின் முதல் எழுதாகலாம் ஆமாம்! ஆண்களை இருப்பது தான் எத்தனை சௌகர்யம் ! 23 Sankar Narayanan and 22 others 7 Comments 11 Shares Like Comment 7
  வெற்றி மேடைகள் மட்டுமே கௌரவமாக்கும் நாம் கடந்து வந்த வாழ்வின் வலிகளை !!!!!!!!!!!!!!!!!!!
  நொடி நேரத்தில் தவறி போகும் மரணத்தை சொல்லலாம் உன் பார்வைக்கு நிகராய், இரண்டுமே ஆசுவாச படுத்திக்கொள்ள நெடு நேரம் எடுக்கும் !
  நீ காதல் கடிதம் ஒன்று தருவாயா ? என்று நீண்ட நாளாய் காத்துக்கிடக்கிறேன் ...... அதில் காதல் இல்லையென்பிலும் பரவாயில்லை , என் பெயர் தாங்கிய ஒற்றை சொல் கூடவா இல்லாமல் இருக்கும்! 62 MUTUAL FRIENDS  •  SRI CHANDRASEKHARENDRA SARASWATHI VISWA MAHAVIDYALAYA Bhanu Naveen 31 Naveen Kumar, Sankar Narayanan and 29 others 3 Comments Like Comment Share
  காதல்' என்ற சொல்லை உச்சரிக்கும் எல்லா பொழுதுகளிலும், உன் முகம் கடந்து போவதை தவிர்க்கவே முடிவதில்லை!
  காற்றின் ஆட்டுவித்தலுக்கு இரைந்து கொண்டே இருக்கும் மரத்தை போல , ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் என்னை, காதல் நிறைந்த பார்வை ஒன்றால் , வாயடைக்க செய்து , மேலே கொஞ்சம் வெட்கத்தையும் படர செய்கிறாயே, அது எப்படி?
  ஜனனமும் மரணமும் ஒரு முறை என்று யார் சொன்னது? நித்தமும் நிகழ்கிறது இவை எனக்கு உன் தயவால்!
  எதிரெதிர் துருவங்களாய் இருக்கிறோம் எப்போதும் ஆனால் காந்தத்தை போல ஓட்டிக்கொண்டே !
  எழுதி எழுதி எழுதி உன் நினைவுகள் தீர்க்க முயல்கிறேன்! ஆனால், பார்வை ஒன்றை வீசி, முடிதலுக்கு முடியாமை செய்கிறாய் !
மீனு, மீனு பாப்பாவாக!   அதிகாலையிலேயே எழுந்து விடுவாள் மீனு குட்டி, பணிகள் ஏதுமில்லை என்றாலும் பரபரப்பாயிருப்பாள் நாள் முழுதும், காலை உணவூட்ட தேடி பார்க்கையில் தலை துவட்டிய துண்டை தோளின் குறுக்கே அணிந்து என்னைபோலே என்றெண்ணி சொப்புகளுடன் சமையல் செய்வாள் மீனம்மா, மீனுவின் அம்மா மீனம்மா என்ற விளக்கம் சொல்லி இப்படி தான் அழைப்பான் எங்கள் கீழ் வீடு பையன், பள்ளி கிளம்பும் அவசரத்தில் அவள் அண்ணன் கழட்டி எறிந்த சட்டையை முழங்கால் வரை அணிந்து அவனுக்கு அண்ணனாகியிருப்பாள் அதன் பிறகு, மடித்த துணிகளை அடுக்க அலமாரி திறக்கையில் அங்கிருக்கும் பிறந்தநாள் கிரீடம் தரித்து இளவரசி ஆகியிருப்பாள் அந்த நொடி, இல்லம் திரும்பிய அவள் அப்பாவின் கண்ணாடி, அடையாள அட்டையை மாட்டி கொண்டு, அப்பாவென சொல்லி திரிவாள் அவளாகவே, தலை வலி தைல புட்டிகளை கொண்டு நெஞ்சில் வைத்து சோதித்து டாக்டரம்மா வேடமும் போட்டு கலைப்பாள், எத்தனை யோசித்தும் பிள்ளைகள் விருப்பங்களின் உளவியல் மட்டும் புரிபடவே மாட்டேன் என்கிறது, அடுப்படி வேலைகளை முடித்து இப்போது மீனு என்னவாகி இருப்பாள் என்ற ஆவல் மேலிட வந்தால், பொம்மைகளை அணைத்தபடி உறங்கி இருப்பாள் மீனு...
  மீனுவின் மியாவும் ஜூ ஜூவும்... பழுப்பு நிறக் கண்களோடு , பயிற்சிகள் ஏதுமின்றி மதில் மேல் நடக்கும் பூனைகளைக் கண்டால் மீனு குட்டிக்கு எப்போதும் மிரட்சிதான் . அதிலும் இரவில் ஜன்னல் இடுக்கினுள் உடல் தளர்த்தி நுழையும் சாதுர்யம் பார்த்து அலறி அழுவாள் ! சாப்பிட அடம் பிடிக்கும் பொழுதுகளிலெல்லாம் மியாவ் என்றால் மறுப்புகளின்றி நம் வேலை எளிதாய் முடியும் இதன் எதிர் மறையாய் , ஜூ ஜூ என்று சொன்ன மாத்திரத்தில் , எத்தனை அழுகையிலிருந்தும் மீண்டு விடுவாள் மீனு பாப்பா! ஈன்று பத்தே நாளான எதிர் வீட்டு நாய்குட்டிகள் மீது அவளுக்கு சொல்லத் தெரியா பிரியம். நடக்கப் பழகியிராத குட்டிகளை தூக்கும் போதெல்லாம் எங்கிருந்தோ வந்து விடுகிறது அவளுள் ஒரு தாயின் மாண்பு ! நழுவி இறங்கும் குட்டிகளை மீட்டெடுத்து தோளில் கிடத்தும் அழகில், உலகம் சில நொடி அப்படியே நின்றால் என்ன வென்று தோன்றும் ! அவள் உலகு அணு தினமும் மியாவும், ஜூ ஜுவும் இன்றி நகர்வதேயில்லை . அலுவல் நிமித்தமாய் நகரின் அடுக்கு மாடி குடியிருப்புக்கு புலம் பெயர்ந்த பிறகு இப்போதும் அவள் உலகில் பூனை களும் ஜூ ஜூ களும் உலவி கொண்டு தான் இருக்கின்றன . இன்னும் எத்தனை...
சுதந்திரத்தின் சூத்திரம் ஆடையில்லை   அம்மி அருந்ததி இன்னும் சிலரின் சாட்சியோடு சுயம் இழக்கிறோம் துணை ஆகும் முதல் நொடி வரை இது தெரியாமல் போவது தான் பெரும் ஆச்சர்யம் ”ஒருவருக்கொருவர்” விட்டு கொடுத்தால் என்பது பொதுமொழி என்றாலும் ”ஒருவருக்காக ஒருத்தி” என்பதே இதன் உண்மை மொழி என்பதறிவோம் பின்பு, பிரச்சனைகள் ஏதும் வராது மறுப்புகள் ஒன்று வரும் வரை, வேலைக்கு போக கூட அனுமதி உண்டு ஆனால் அதன் முன்னும் பின்னுமான பணிகள் எல்லாம் நமதென்பதை தெரிந்து கொண்டு, விவாதங்கள், சண்டைகள் என எவற்றிற்கும் வேலை இருக்காது வழிமொழிதல் மட்டும் நம் வேலை என்றிருந்தால், வலிகள் இருந்த போதும் கால்கள் கடுக்க பயணிப்போம் உங்கள் பாதையிலே நாங்கள், உங்களின் அதிப்தி களைய பெயரில் தொடங்கி எண்ணங்கள், அடையாளங்கள் அத்தனையும் தொலைக்கிறோம் ஒன்றன்பின் ஒன்றாய், எங்களுக்கு இப்போது கொஞ்சம் புரிகிறது சுதந்திரத்தின் சூத்திரம் ஆடையில்லை என்பது!