பிறந்த நாள் வாழ்த்துக்கள் டா .
நீரை போல இவன்,
நிரம்பும் பாத்திரத்தின் வடிவம் பெறுவான் .
எந்த உறவுக்குள்ளும் இவனை பொருத்தி பார்க்கலாம் .
தகப்பனை போல, சகோதரனை போல, ஆசானை போல, என் பிள்ளையை போல, நண்பனை போல,
நேரம் மற்றும் தேவையை பொறுத்து ,
இவைகளில் ஒன்றாய், அல்லது கலவையையாய் மாறி போவான்.
இவனுக்கு அடை மொழி ஒன்றை தேடி வந்தேன் நீண்ட நாளாய்,
தூயவன் என்ற சொல்லுக்கு முக்கால் பொருந்தி போகிறான் என்று நினைக்கிறேன் ...
உருவமும் , மனமும், பொருந்தாமல் தான் இருக்கிறது இயல்பில் ...
ஆறடியில் இவன் உருவம் கண்டு பிம்பம் வரைந்தவர் பலருக்கு தெரியாது
கருணையும், அறமும் கொண்ட இவன் குழந்தை மனது.....
உண்மை திராவிடத்தின் நிறமும், மனமும், கர்வமும் கொண்ட இவனுக்கு பிறந்த நாள் இன்று ...
பெண்களின் பெரும் துயர் இது...
உலகின் பார்வையில்
ரத்த உறவு இல்லாத எல்லா ஆண்களுக்கும் அவர்களுக்குமான உறவுக்கு
இரண்டே நிறம் ஒன்று காதல் சாயம் இன்னொன்று கள்ள சாயம்..
இவை இரண்டுமற்ற நிறத்தில் நம் உலகம் நம்மை
திருப்பி பார்க்க முதல் காரணம் (மூல காரணம்)..இவன் தான் ..
சுற்றத்தின் முழு புரிதல் இன்றி ஆண் பெண்ணின் உறவு காலம் கடந்து பயணிப்பது இல்லை..
எங்கள் இருவர் இணையரின் புரிதல் இந்த ஒளிவு மறைவற்ற இந்த பிரியங்கள் தொடர இரண்டாம்காரணம் என்பேன் ..
இவன் வாழ, வாழ்த்த சுற்றம் பல இருந்தும்..
என் வாழ்த்துக்கள் இன்றி நிறைவது இல்லை இவனின் இந்நாள்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் டா .... வாழ்க வளமுடன் ....
[1/9, 22:35] Bhanu: இவை எனது சென்ற ஆண்டின் பிறந்தநாள் வாழ்த்து...
இவ்வாண்டும் என் வாழ்த்துக்களை வார்த்தை ஆக்குகிறேன்.. என்பினும்
எழுதி தீர்ப்பதில்லை இவ்வுறவின் சிறப்பு...
மித மிஞ்சிய கோபத்தின் அடுத்த நொடி அதை மறந்து பேசுவோம் அல்லவா..
கோப வார்த்தைகள் அல்ல நம் மனதின் கண்ணாடி என்ற புரிதல் ஒன்றே போதும் நம் அன்பின் பொருள் விளங்க......
நீ நான் நவீன் என துவங்கிய நம் உறவு இன்று முன்னும் பின்னுமாய் கிளை பரப்பி செல்கிறது..
உண்மை அன்பு ஒன்றே போதும்
உறவு அடுத்த தலை முறை கடந்து செல்ல... செல்கள் ஒன்றில்லை என்ற போதும் நம் பிள்ளைகளின் உறவு முறை விளித்தல் நம் அன்புக்கு சான்று..
உன் ஆயுள் நீட்சி ஒன்றே எங்களின் மகிழ்வின் பலம்..
வாழ்க என்றும் நலமாய் வளமாய்...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அண்ணா 









Comments
Post a Comment