Skip to main content
அம்மா "காதலர் தின வாழ்த்துக்கள்"

எத்தனை அருகில் இருந்தாலும் காதலை எல்லா நேரங்களிலும்
உணர முடிவதில்லை.
நானும் அம்மாவும் வசிப்பது கூப்பிடும் தூரத்தில்தால் என்ற போதும், பிள்ளைகளும், வீடும், பணியும் மான ஓட்டத்தில் அம்மாவை சந்தித்தே 10 நாட்களுக்கு மேல் ஆகிறது .
நாளுக்கு 10 முறையாவது போன் செய்யும் அவரிடம் கேள்விகளுக்கு மட்டும் விடை சொல்லி துண்டிப்பேன்.
இன்று என்னவர் ஊரில் இல்லை என்பதனால் மதியம் வருவதாய் சொல்லியிருந்தேன் அம்மாவிடம்.
நான் இல்லம் நுழைந்த அடுத்த நொடி தட்டில் உணவு பரிமாற தொடங்கிவிட்ட அம்மா, நான் கை கழுவவும் அவகாசம் கொடுத்திருக்கவில்லை .
வற்றகுழம்பு , கீரைகூட்டு, அப்பளம், ரசம் அத்தனையும் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதமும் ஆகிடாத வலது கையை கொண்டே செய்திருக்கிறார்.
நீண்ட நாளைக்கு பிறகு மிக திருப்தியாய் சாப்பிட உணர்வு.
திட்டி கொண்டே, திருத்தி கொண்டே, உபதேசித்து கொண்டே அன்பு செய்யும் அம்மாக்களின் காதல் புரிவதே இல்லை நமக்கு பெரும்பாலான சமயங்களில்,
அழகான `காதலை அம்மாவை தவிரவும் வேறு யாரும் தந்திட முடியாது.
அம்மாக்களின் இந்த அக்கறை கலந்த காதலில் பல நேரங்களில் அப்பாக்களையும் புறம் தள்ளி விடுகிறார்கள்.
வார்த்தைகளில் சொல்ல இயலா பேரன்பை தரும் அம்மா உன்னிடம்
இத்தன்னை நாளாய் சொன்னதில்லை
இன்று சொல்கிறேன் காதலுடன் அம்மா "காதலர் தின வாழ்த்துக்கள்"
May be an image of 2 people
Sathiyanaranan Naidu, Priya Sriradha and 23 others
5 Comments
Like
Comment

Comments

Popular posts from this blog

பாலியல் பிரச்சனைகள்

உலகெங்கும் நடக்கும் பெண்களுக்கு எதிரான அநீதிகளில் பாலியல் கொடுமைலளுக்கு தான் முதலிடம் தரலாம். அதிலும் இந்தியாவில் நடக்கும் பாலியல் வக்கிரங்களை division sub division கொண்டும் பிரிக்கலாம் போல .வருடத்திற்கு அல்ல நாள் ஒன்றிற்கு நடக்கும் பாலியல் பிரச்சனைகள் (அதும் வெளியில் தெரியும்) புள்ளி விவரங்களை கேட்டால் அதிர்ந்துபோவோம் நாம் அனைவரும். ஆனால் அந்த ஒரு நிமிடம் மட்டுமே! அடுத்த வீட்டுக்கு நடக்கும் அநீதிகளுக்கு "அச்சசசோ" என்று பரிதாபம் காட்டிவிட்டு நமக்கு நடக்காதவரை நல்லது என்று கடந்து போய்கொண்ட இருக்கிறோம் அனைவரும். கடல் போன்ற பிரச்சனையின் துளி தெரியும் நமக்கு, முழுவதும் தெரியாமல் போவது இன்னும் பெரிய அவலம். நாள்தோறும் கற்பழிப்பு பற்றிய செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது தொலை காட்சியிலும். செய்தி தாள்களிலும். அறிந்து கொண்டே தான் இருக்கிறோம், அதை தாண்டி நகர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். புள்ளிவிவரங்களால் பெருகி வரும் இந்த பிரச்சனையின் மூலமும், வரும் காலமும் குறித்த புரிதல் இல்லாமல் இருப்பது பெரும் துயரம். இந்த பிரச்னை குறித்து விவாதிக்க துவங்கும் பொழ...
பணி பெண் ஒருத்தி !!!!!!!!!!!!!!!!!! முழுவதுமாய் உலராமல் ஈரம் படிந்த கூந்தலுடன் பணிக்கு ஆயத்தமாவாள், அமர்ந்திருக்கும் அழகு பெண்ணின் முடி உலர்த்த, அது முடிந்து புருவம் திருத்துகிறாள் மாறி மாறி ,ஆடி கொடுத்து ஒப்புதல் பெற சரியென்பவர் எவருமிருப்பதில்லை, திருத்தம் சொல்ல மீண்டும் திருத்துவாள், அதன் பிறகு அறையடி கூந்தலை காலும் அறையுமாக்குவாள் கூந்தலை முடியா சபதமேற்ற பெண்களுக்கு, இடை இடையே அவள் நிறுவன தயாரிப்புகளுக்கு இவளே விளம்பர நிர்வாகியாகி விற்பனைக்கு மெனக்கெடுவாள் ப்ளீச் என்போரிடம் கூடவே பேசியலுக்கும், வேக்ஸ்ங் செய்வோரிடம் பெடி-க்யூர்-க்கும் சிபாரிசு செய்து வந்திருக்கும் பெண்ணின் அழகுக்கும், அவள் முதலாளியின் லாப கணக்கிற்கும் பாடுபடுவாள், இரவின் முகப்பில் இறுக்கி பிடித்த ஜீன்ஸ் பேண்ட களைந்து சுடிதார் துப்பட்டாவிற்கு மாறி இப்போது காய்ந்திருக்கும் தலையை பின்னி முடித்து அலங்காரம் கலைத்து வீடு திரும்புவாள் அழகு நிலைய பணி பெண் ஒருத்தி !!!!!!!!!!!!!!!!!!  

சொல்லதீங்க! Please!

ஒருவர் ஹெலிகாப்டரில் வந்திறங்குகிறார், இன்னொருவர் வரும் முன்பு வெப்பத்தை தணிக்க ஒரு லாரி தண்ணீர் தெளிக்க படுகிறது. மற்றொருவர் பிரச்சார  மேடையில் ஒன்றிற்கு நான்காய் air cooler  நிற்கிறது. பிரச்சார சமயங்களில் கூட வெயிலையும் சந்திக்காது, அவர்களது சுகபோகங்களையும் இழக்காத இவர்களுக்கெல்லாம் மின் வெட்டு  என்பது என்னவென்றே தெரியாது. மின்வெட்டை ஒழிப்போம் என்றும் சொல்லும் எல்லா அரசியல் தலைவர்களும் மின் வெட்டு என்பதை முழுவதும் அல்ல கொஞ்சமும் அறியாதவர்கள். அதனால தயவது செய்து உங்களது எல்லா தேர்தல் பிரச்சாரங்களிலும், Letter-ல  இப்படிக்கு சேக்குரமாதிரி, மின் வெட்டை ஒழிப்போம், கச்ச தேவை மீட்போம்-னு சொல்லதீங்க!  Please!