Skip to main content

Posts

Showing posts from 2014

பிரசவம்

பிரசவம். வலி கண்டதாய் சொல்லி பிரசவச அறையில் கிடத்துகிறார்கள். எப்படி வலி என்ற இரெண்டெழுத்து மட்டும் இதற்கு பொருந்தும் என்று தெரிய வில்லை,  நடு எழும்பிற்கு கீழே  நடக்கும் மாற்றங்கள் அத்தனை  தாங்க தக்கவையாக இராது, முனகலும் கதறலும் செவிலிகள் காதுகளுக்கு கேட்காது,. இதோ இன்னும் பத்து நிமிடம் என்று ஒவ்வொரு 10 நிமிடதிற்கும் பொய்  வாக்குறுதிகள் கொடுப்பார்கள் ஆயாக்கள், உள்ளங்கைகளை பிரியமானவர்கள் பற்றி கொண்டால் நல்லது என்றிருக்கும்,   இதன் நடுவே  பனிக்குட நீரும் குருதியுமான ஈர பிசுபிசுப்பில் வேறு  படுக்கவேண்டியதாகி போகும், தலை தெரிவதை மருத்துவர் முக்க சொல்கிறார்  அய்யோ !முனங்கவும் ! வலுவற்ற நிலையில் , அம்மா !என்று அலறி இறந்து போனேனா என எண்ண  துவங்கும் வேளையில்,  பிறந்திருக்கும் என் மகவு அழ திராணிற்று  இருக்கும் எனக்கு பதிலாய் அழுது கொண்டே !

பாலியல் பிரச்சனைகள்

உலகெங்கும் நடக்கும் பெண்களுக்கு எதிரான அநீதிகளில் பாலியல் கொடுமைலளுக்கு தான் முதலிடம் தரலாம். அதிலும் இந்தியாவில் நடக்கும் பாலியல் வக்கிரங்களை division sub division கொண்டும் பிரிக்கலாம் போல .வருடத்திற்கு அல்ல நாள் ஒன்றிற்கு நடக்கும் பாலியல் பிரச்சனைகள் (அதும் வெளியில் தெரியும்) புள்ளி விவரங்களை கேட்டால் அதிர்ந்துபோவோம் நாம் அனைவரும். ஆனால் அந்த ஒரு நிமிடம் மட்டுமே! அடுத்த வீட்டுக்கு நடக்கும் அநீதிகளுக்கு "அச்சசசோ" என்று பரிதாபம் காட்டிவிட்டு நமக்கு நடக்காதவரை நல்லது என்று கடந்து போய்கொண்ட இருக்கிறோம் அனைவரும். கடல் போன்ற பிரச்சனையின் துளி தெரியும் நமக்கு, முழுவதும் தெரியாமல் போவது இன்னும் பெரிய அவலம். நாள்தோறும் கற்பழிப்பு பற்றிய செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது தொலை காட்சியிலும். செய்தி தாள்களிலும். அறிந்து கொண்டே தான் இருக்கிறோம், அதை தாண்டி நகர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். புள்ளிவிவரங்களால் பெருகி வரும் இந்த பிரச்சனையின் மூலமும், வரும் காலமும் குறித்த புரிதல் இல்லாமல் இருப்பது பெரும் துயரம். இந்த பிரச்னை குறித்து விவாதிக்க துவங்கும் பொழ...

மீனுவின் மியாவும் ஜூ ஜூ வின்

பழுப்பு நிற கண்களோடு , பயிற்சிகள் ஏதுமின்றி மதில் மேல் நடக்கும் பூனைகளை கண்டால் மீனு குட்டிக்கு எப்போதும் மிரட்சிதான். அதிலும் இரவில் ஜன்னல் இடுக்கினுள் உடல் தளர்த்தி நுழையும் சாதுர்யம் பார்த்து அலறி அழுவாள் ! சாப்பிட அடம் பொழுதுகளிலெல்லாம் மியாவ் என்றால் மறுப்புகளின்றி நம் வேலை எளிதாய் முடியும் இதன் எதிர் மறையாய் , ஜூ ஜூ என்று சொன்ன மாத்திரத்தில் , எத்தனை அழுகையிலிருந்தும் மீண்டு விடுவாள் மீனு பாப்பா! ஈன்று பத்தே நாளான எதிர் வீடு நாய்குட்டிகள் மீது அவளுக்கு சொல்ல தெரியா பிரியம். நடவ பழகியிராத குட்டிகளை தூக்கும் போதெல்லாம் எங்கிருந்தோ வந்து விடுகிறது அவளுள் ஒரு தாயின் மாண்பு ! நழுவி இறங்கும் குட்டிகளை மீட்டெடுத்து தோளில் கிடத்தும் அழகில், உலகம் சில நொடி அப்படியே நின்றால் என்ன வென்று தோன்றும் ! அவள் உலகு அணு தினமும் மியாவும், ஜூ ஜுவும் இன்றி நகர்வதேயில்லை . அலுவல் நிமித்தமாய் நகரின் அடுக்கு மாடி குடியிருப்புக்கு புலம் பெயர்ந்த பிறகு இப்போதும் அவள் உலகில் பூனை களும் ஜூ ஜூ களும் உலவி கொண்டு தான் இருக்கின்றன . இன்னும் எத்தனை நாள் என்று...

மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை !

நேற்று மீண்டும் ஒரு பாலியல் கொடுமை. 6 வயது பள்ளி சிறுமிக்கு நடந்திருப்பது வெளி வந்திருக்கிறது. அதுவும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பள்ளி காவலாளி இரண்டு பேரால். இது நடந்திருப்பது என் மகன் புதிதாய் சேர்ந்திருக்கும் அதே பள்ளியின் மற்றொரு கிளையில். நம்பிக்கை என்பது பள்ளி கட்டிடங்களும் அங்கு அவர்கள் தரும் விளம்பர வாக்குறுதிகளும் வரவேற்பில் அமர்ந்து கனிவாய் பேசும் பெண்ணையும் சார்ந்ததல்ல என்ற புரிதலை தந்திருக்கிறது இந்த சம்பவம். இங்கு பயுலும் பெரும்பாலான மாணவ, மாணவியரின் பெற்றோர் பணிக்கு செல்பவராக இருக்கிறார்கள். தரமான கல்வியை தாண்டியும் இங்கு பிள்ளைகளை இவர்கள் சேர்க்க காரணம் after school care என்று சொல்லப்படும் ஒரு வசதி . அதாவது பெற்றோர் பணியிலிருந்து திரும்பும் வரை பிள்ளைகளை பத்திரமாய்! பார்த்து கொள்வது.(இதற்கு கூடுதல் கட்டணம் ) . இது போல கல்வி , மொழிதிறன் , பாதுகாப்பு என்று இவர்கள் தரும் வாக்குறுதிகளை நம்பி லட்சங்களை கொடுத்து சேர்கிறார்கள் பிள்ளைகளை . இந்த சம்பவத்திற்கு தனி நபர்கள் , மட்டுமில்லாது பள்ளி நிர்வாகத்திற்கும் பெரும் பங்கு இருக்கிறது . இந்த பள்ளி...

சொல்லதீங்க! Please!

ஒருவர் ஹெலிகாப்டரில் வந்திறங்குகிறார், இன்னொருவர் வரும் முன்பு வெப்பத்தை தணிக்க ஒரு லாரி தண்ணீர் தெளிக்க படுகிறது. மற்றொருவர் பிரச்சார  மேடையில் ஒன்றிற்கு நான்காய் air cooler  நிற்கிறது. பிரச்சார சமயங்களில் கூட வெயிலையும் சந்திக்காது, அவர்களது சுகபோகங்களையும் இழக்காத இவர்களுக்கெல்லாம் மின் வெட்டு  என்பது என்னவென்றே தெரியாது. மின்வெட்டை ஒழிப்போம் என்றும் சொல்லும் எல்லா அரசியல் தலைவர்களும் மின் வெட்டு என்பதை முழுவதும் அல்ல கொஞ்சமும் அறியாதவர்கள். அதனால தயவது செய்து உங்களது எல்லா தேர்தல் பிரச்சாரங்களிலும், Letter-ல  இப்படிக்கு சேக்குரமாதிரி, மின் வெட்டை ஒழிப்போம், கச்ச தேவை மீட்போம்-னு சொல்லதீங்க!  Please!

காதலோடு

உங்கள் காதல் கதையை எதற்கு எங்களிடம் என்றால் , வாழ்வின் சந்தோஷங்களை, வலிகளை, துயரங்களை, முடிவுகளை, , நண்பர்களிடம் தானே சொல்லுவோம். இல்லையா? அது தான், வாழ்வின் வெற்றி, சந்தோஷம் ஏதோ இது !   காதலின் மூலம் தெரியாது, ஆழம் தெரியும் காதலித்தவர்கும், காதலிக்காதவர்கும்.         "காதல்"  இந்த ஒன்றை கொண்டே 100000 ஹய்கூ  பிறக்கலாம் 10000 கவிதைகள் எழுதலாம், 1000 சிறுகதைகள் உருபெறலாம் 100 நாவல்களுக்கான கரு உண்டு குறும்படங்கள், திரைப்படங்கள் இன்னும் பல நூற்றாண்டு இதை தவிர்த்து சொல்ல இயலாத காரியம். அந்த காதல் என்னை மட்டும் விடுமா என்ன?    "நாங்கள்" மற்றவரை போல அல்ல, என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். காதலெனும் வரம் பெற்ற அத்தனை  பேரை போல தான் நாங்களும். "பேறு" பெற்றவர்கள்.   இருவரும் அவரவர் கொள்கைகளை ஏற்க நிர்பந்தித்திருக்கிறோம்.ஆனால் பெரும்பாலான சமயங்களில் அவரவர் கொள்கைகளிலேயே பிடிவாதமாய் நின்றிருக்கிறோம். கோபம் வருவதுண்டு அவ்வபோது, ஆனால் மறுகணமே எங்களின் காதல் அது அத்தனையும் புறந்தள்ளி எம் நெருக்கத்தின்...

தமிழ் புத்தாண்டு கவிதை போட்டி

"சித்திரை " சாலிவாகனனோ. கணிஷ்கரோ சொல்லி சென்றதாய் சரித்திரம் சொல்கிறது . மே-ஷம் சூரியனில் புகுவதாய் ஜோதிடம் சொல்கிறது , மூலம் எதுவென்பினும், நிறைவு தரும் தை புலர, ஆரம்பம்  தரும் சித்திரை சூரியனுக்கு மட்டுமல்ல, சுற்றத்தார் அனைவருக்குமே சுகந்தமே

விட்டு சென்ற புள்ளியில்.....

புத்தாண்டு பிறந்ததாய் ஆர்பரிக்கிறார்கள் இவர்கள் யாவரும் ! நீ விட்டு சென்ற புள்ளியில் நின்று கொண்டிருக்கும் எனக்கு , நீ வந்த பிறகே பிறக்கும் புது ஆண்டு !

எச்சில் ஈரத்தில்

  சண்டையிடும் இரவுகளின் விடியலை, முத்தங்களால் துவங்கி வை! கோபத்தின் அனல் கொண்டு,பேசிய வார்த்தைகள் யாவும்  கரைந்து விடாதா  அந்த எச்சில் ஈரத்தில் !

கடந்து

  'காதல்' என்ற சொல்லை உச்சரிக்கும்   எல்லா பொழுதுகளிலும், உன் முகம் கடந்து போவதை  தவிர்க்கவே முடிவதில்லை!

பார்வை ஒன்றால்

காற்றின் ஆட்டுவித்தலுக்கு இறைந்து  கொண்டே இருக்கும் மரத்தை போல , ஓயாமல்  பேசிக்கொண்டே இருக்கும் என்னை, காதல் நிறைந்த பார்வை ஒன்றால் , வாயடைக்க செய்து , மேலே கொஞ்சம் வெட்கத்தையும் படர செய்கிறாயே, அது எப்படி?

எழுதி எழுதி

எழுதி எழுதி எழுதி உன் நினைவுகள் தீர்க்க  முயல்கிறேன்! ஆனால், பார்வை ஒன்றை வீசி, முடிதலுக்கு முடியாமை செய்கிறாய் !

காத்துக்கிடக்கிறேன் ......

நீ காதல் கடிதம் ஒன்று தருவாயா ?   என்று நீண்ட நாளாய் காத்துக்கிடக்கிறேன் ...... அதில் காதல் இல்லையென்பிலும் பரவாயில்லை , என் பெயர் தாங்கிய ஒற்றை சொல் கூடவா இல்லாமல்  இருக்கும்!

நுட்பமாய்

மை கொஞ்சமும் காதல் நிறையவும் கசியும் என் கண்களை பார்! அதை காட்டிலும் காதல் அட்டைகள் ஒன்றும் அதனை நுட்பமாய் என் காதல் சொல்லி விடபோவதில்லை ! காதலர் தின வாழ்த்துக்கள் !

மழலை மொழி

ஒற்றை எழுத்தால் குரலெடுத்து ஆ  என்றாய் ஊ என்றாய், சுற்றம் இருப்பவரோ அதை, வெறும்  சத்தம்   என்றே எண்ணியிருக்க , எழுத்தொன்றும் சொல்லாகும் அற்புதம் அது உன் மழலை மொழி என்றறிவேன் நான் மட்டும் ! " யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் " என்றான் பாரதி . மகளே உன் மொழி அறியாமல் போனதனால் !