Skip to main content

Posts

Showing posts from December, 2011

தேவை!

தேவையின் அடிப்படையில் வாங்கும் பொருட்களை காட்டிலும் , ஆசையின் காரணமாய் வாங்கும் பொருட்களே பெரும்பாலும் நம் இல்லம் முழுவதும் நிறைந்து கிடக்கிறது!

இடர்

செய்முறை விளக்கங்கள் எத்தனை கேட்டாலும் , செய்யும் பொழுதுகளில் எல்லாம் கொஞ்சம் இடரத்தான் செய்கிறது!

இயலாது

தொலைந்து போ என்கிறாய் , உனது ஞாபக மூட்டைகளை தூக்கிகொண்டு, என்னால் நீண்ட தூரம் பயணிக்க இயலாது என்பது உனக்கு தெரியாதா?

தீ

மோகம் தீ என்பது உனக்கு தெரியாதா? ஒற்றை முத்தம் எச்சில் மேலிட தந்துவிட்டு அதை அணைத்துவிட பார்க்கிறாயே ?

கிழிப்படும் நிசப்தம்!

ஆசையாய் அழைக்கும் பொழுதுகளில் எல்லாம் , `office-ல இருக்கேன் tension பண்ணாம phone-ன வை ` என்று கூச்சலிடும் உன் சொற்களில் என் அறையின் நிசப்தம் கிழிந்து , உன் வெறுப்பை நிரப்பி கொள்கிறது!

துணைக்கு

தனிமைகள் எனக்கு வாய்ப்பதே இல்லை, துணைக்கு உன் நினைவுகள் ஒட்டிக்கொண்டு வந்து விடுகிறது!

இதயம் மட்டுமே!

சுட்டெரிக்கும் உன் சொற்களால் உணர்வற்று போன உடலில் , உன் நினைவுகளை தாங்கி உன் பெயர் சொல்லி துடித்து கொண்டிருக்கும் இதயம் மட்டுமே என் இருப்பை உறுதிசெய்கிறது!

நிச்சயம்

உன்னை பற்றி எழுதிய எழுத்துக்கள்தான் எனக்கும் கவிதைக்குமான திருமணத்தை நிச்சயம் செய்தது!

பகிர்வு

கணினி, இணையம் , முகநூல் இங்கேயே முடிந்து விடுகிறது நமது எல்லா பகிர்வுகளும் , இல்லத்தில் பகிர உறக்கத்தை தவிர வேறெதுவும் இருப்பதில்லை இப்பொழுதெல்லாம் !