காதலர் தின வாழ்த்துக்கள் !
"நீ என் வாழ்வின் வரம்"
அப்படி ஒன்றும் சொன்னதில்லை நீ இதுவரை,
ஒவ்வொரு நாளும் விடை பெறுவதின் முன்பு
காதல் சொன்னதாய் ஞாபகம் ஏதுமில்லை,
என் வீதி கடை கோடியில்
எனக்காக காத்திருந்ததாய் நினைவேதும் இல்லை,
கண்களை பார்த்து கதை பேசியதும் இல்லவே இல்லை,
பரிசுகள் தந்து காதலை ஊர்ஜிதம் செய்ததும் இல்லை,
கடற்கரை மணலில் கை கோர்த்து
கதைகள் ஏதும் பேசியதில்லை,
வாழ்த்து அட்டைகளின் வாசகங்களில் காதல் சொன்னதில்லை,
இரவுகள் முழுவதும்
குறுஞ்செய்திகளால் காதல் செய்ததும் இல்லை
என் முத்தங்களுக்கு மயங்கியதும் இல்லை
அணைப்புக்கு ஏங்கியதும் இல்லை
இப்படி ஏதும் செய்யாமலே
காதல் உணர்த்தும் உனக்கு,
எப்போதும் போல நான் முத்தங்களுடனும் ,
வாழ்த்து அட்டைடைகளுடனும், குறுஞ்செய்திகளுடனும், பரிசுகளுடனும் காதலர் தின வாழ்த்துக்கள் !


Comments
Post a Comment