கண்ணை மூடி திறக்கும் வேளையில்
முகங்களற்ற தேசமானது,
திகைத்து குழம்புகிறோம் ஒரு நிமிடம்,
உடைகளற்ற உலகம்,
உருண்ட காலங்களில்,
கலாச்சார போர்வை போத்தி வேறு உருவம் தரித்து நின்றது..
கண்கள் கதை பேசும் என்று நம்பி கொண்டிருந்தவர்கள்
கண்கள் தவிர ஏதுமற்ற முகத்தில் மன உணர்வுகள் தேடி தெளிவற்று போகிறார்கள்,
கட்டி தழுவலா , கை கூப்பி மரியாதை செய்தலா , எது சிறந்த கலாச்சாரம் என்று சண்டையிடுவோர் அத்தனைபேரும் கூடி விலகி நிற்கும் ஒற்றை கலாசாரமாய் மாறி நிற்கிறார்கள்.
முகமூடி அணிந்த மனிதன் அவன் என்று வசை பாடி களைத்தவர்கள் சௌகர்யமாய் தேவையற்ற மனிதர்களை கடந்து செல்கிறார்கள் முகமூடி அணிந்து....
இன்னும் கொஞ்சம் சௌகர்யம் பழகி கொள்ளுங்கள் பரவாயில்லை ,முகம் பார்த்து பேசும் நாட்கள் நெடு தூரத்தில் இல்லை அதற்ககுள் இதுவரை கொஞ்சம் படித்த மனிதத்தின் மிச்சமும் படித்து வைப்போம்.
சுழன்ற உலகம் மீண்டு திரும்பும்போது அதன் தேவையாவும் தொடங்கும் ஒரே புள்ளி அதுதான் .
Comments
Post a Comment