பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
என் அன்பு அண்ணா...
உறவு என்பது இரண்டே வகை..
நினைக்கும் பொழுதில் நெருடல்..
நினைத்த மாத்திரத்தில் நெகிழ்வு...
நீ கொடுத்து கொண்டே இருக்கும் எதிர்பார்பற்ற இந்த பிரியம் தான் நெகிழ்வின் விளிம்பில் என்னை உந்தும் சக்தி...
வரம், தவம், அருள், என எவற்றிலும் பற்றற்ற எனக்கு உன் பந்தம் பற்றிய ரிஷி மூலம் அறிய முற்படும் பொழுதுகளில் அவை குறித்த பற்றுதல் வந்து போகிறது..
நான் எப்போதும் சொல்வேன் என வாழ்வு ஆசிர்வாதங்களால் நிறைந்தது என்று..
அவ்வழியில் நீ என் ஆக சிறந்த ஆசீர்வாதம்...
முதல், வழி, முற்று என் ஏதுமில்லை நம் உறவில்...
உன் பூரண ஆரோக்கியம் ஒன்றே நீ கொண்ட சுற்றம் எங்களின் வேண்டுதலும் வாழ்த்துதலும்..
பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
என் அன்பு அண்ணா... நீ வாழ்க பல்லாண்டு எங்களை வாழ்த்த...
Comments
Post a Comment