Skip to main content

 பிறந்த நாள்! 2015

இதை காட்டிலும் வேறொரு நாள் இருக்க முடியாது நம் ப்ரியத்தை பகிர.
இன்று என் அண்ணனின் பிறந்த நாள்!
பேரன்பு. பெரும் ப்ரியம், யாரும் மாற்ற முடியா நம்பிக்கை, உண்மையின் பின் வந்த உரிமை, ஆன்ம பலம், நட்பு, பற்றுதல்
இந்தனை வார்தையும் அண்ணன் என்ற அந்த ஒற்றை சொல்லுக்குள் நிறையும் என்றால் அவனை அண்ணன் என்றும் சொல்லலாம்.
என் வாழ்வின் கடந்த இந்த 15 வருடங்களிள் அவன் அற்ற மகிழ்வு, துக்கம், வெற்றி, தோல்வி ........ என ஏதுமிருக்கவில்லை.
இவனை போல் வேறொரு பெண்ணுக்கு இவ்வுலகில் இது போன்றொரு உறவு கிடைத்திருக்குமா? என்றால் இல்லையென்றே சொல்வேன்.
நட்பு, ப்ரியம், சகோதரத்துவம் என்ற எந்த கோட்டுக்குள்ளும் அவனை சரியாய் நிறுத்திடவிட முடியாது.
எப்போதும் தாங்க இயலா அன்பினை தந்து யாரையும் ஒப்பிட முடியா வானளாவிய ப்ரியத்தை தருபவன் அவன்.
எப்போதும் நண்பனின் காதலியுடன் சகோதரத்துவம் கொள்ளும் நம் முன் வழி வந்தவன் தான் இவனும். நண்பனின் காதலுக்கு
வக்காலத்து வாங்கி வாதிட வந்தவனிடம் “ உன் சகோதரி என்பினும் இதை கேட்பாயா? “ என்ற கால் நூற்றாண்டு கேள்விக்கு
பதிலொன்றும் சொல்லி போக வில்லை அந்நாளில்.
இரண்டொரு நாளில் வந்து “இனி நீயும் என் சகோதரியே, ஏற்கெனவே இரண்டு இப்போது உன்னோடு மூன்று” என்றான்.
அதோடு நின்றிருக்கவில்லை நண்பன் இனி மச்சான் என்றான்.
விசித்திரம்!
வாழ்வும் கிட்ட தட்ட சினிமா போலவே பல நேரங்களில்!
இதுவும் அதேமாதிரி மாறி போவான், அல்லது மறந்து போவான் என்ற எல்லோரின் எண்ணங்களை தவிடு பொடியாக்கினான்
அதன் பின் வந்த நாட்களில்.
எங்கள்(நானும், நவினும்)காதல் கண்ணியமானதன் காரணம் இவனே!
எங்கள் இருவரின் விளிம்பு நிலைகளை இவனே தீர்மானித்தான். பெருங்கோபம் வந்ததுண்டு அந்நாட்களில், அதன் பின்னான
அவன் உண்மை அன்பின் அடர்த்தி அதை சமன் செய்து போகும்.
நகர்ந்தன நாட்கள். வாழ்வின் பயணத்தில் எத்தனை நிறுத்தங்களில் நான் இறங்கினேனோ அங்கெல்லாம் இறங்குவான்,
மீண்டும் தொடரும் பயணத்தில் மீண்டும் என்னுடனே பயணிப்பான். வழி அத்தனையிலும் மூச்சு முட்டும் அளவு பேரன்பை
தருவான்.
இன்றும் அவனை பொருத்தமட்டில் சகோதரிகள் முன்று. பரிசு, உரிமை, சடங்குகள், சம்பரதாயங்கள் அத்தனையும் ஒன்று தான்.
அன்பை மட்டும் மற்ற இருவரை காட்டிலும் கொஞ்சம் (நிறைய) அதிகம் தருகிறான்.
என்னுடன் பயணித்த இத்தனை வருடங்களில் அவனுக்கு என்னிடமிருந்து கோபம், அவமானம், வெறுப்பு, உதாசீனம், சில
நேரங்களில் உரிமை இதை தவிர வேறொன்றும் கிடைத்திருக்கவில்லை. அவனுக்கு வேறு எதுவும் வேண்டியதுமில்லை, என் இருப்பை தவிர.
என் மீதான அன்பு அவனுக்கு அனிச்சை செயலாகி போனது இப்போதெல்லாம். என்னின் அன்பை என் பிள்ளைகளும்
கிடைக்கபெறுகிறார்கள் இந்த மாமனிமிருந்து இப்போதெல்லாம்.
“இதெல்லாம் இன்னும் எத்தனை நாள்
நவீன் பானு கல்யாணம் வரைக்கும்,
இதெல்லாம் இன்னும் எத்தனை நாள்
நவீன் பானுக்கு குழந்தை வர வரைக்கும்
இதெல்லாம் இன்னும் எத்தனை நாள்
இவனுக்கு ஒரு கல்யாணம் ஆறவரைக்கும்
இதெல்லாம் இன்னும் எத்தனை நாள்
இவனுக்கு ஒரு குழந்தை வர வரைக்கும்”
அத்தனையும் நடந்தது! நம் இருவரும் கரம் பற்றிய படி!
கெடு விதித்தவர்கள் அத்தனை பேரும் வாயடைத்து போனார்கள்.
எந்த நிலையிலும் நி என்னை விட வில்லை இதுவே நிதர்சனம்.
தன்மானம் தந்தும் உடன் நின்றாய்.
யாரும் அறியா தருணம் ஒன்று உண்டு எங்கள் இருவரிடையே. அந்த சூழல் சொன்னது இவன் என் உடன் பிறவா, பிரியா,
உயிர், வாழ்வின் கொடை என்று.
ஒரு நாள் மருத்துவர் சொன்னார் அதே சினிமா பாணியில் கடவுளை வேண்ட Biopsy result சாதகமாய் வர.
கண்ணீர், வேண்டுதல், நம்பிக்கை என அத்தனை தந்து, ஒரு கணம் மரணம்தனை மிரள செய்தான் அவன்.
அவன் பிராத்தனை பலித்து மீண்டும் வாழும் வாய்பொன்று கிடைக்க கை வலிக்க 200 தேங்காய் கடவுளுக்கு உடைத்த
அவனுக்கு என்ன செய்ய என்ற கேள்விக்கு இன்னும் பதில் தேடி கொண்டிருக்கிறேன் நான்.
மறக்க, பிரிய, வெறுக்க, நிராகரிக்க இயலா அன்பை தரும் அவனை எத்தனை காயப்படுத்தியிருக்கிறேன். அதை உரிமை என்று
கதை சொன்னாலும்,
இணையில்லா அவன் அன்புக்கு
இயன்றவரை அன்பு செய்தல் ஒன்றை தவிர வேறு பரிகாரம் இருந்திட முடியாது.
இவை அத்தனைக்குமாய் மன்னிப்பு, நன்றி, அன்பு அத்தனையும் சேர்த்து சொல்கிறேன்.
பிறந்த நாள் வாழ்துக்கள் அண்ணா!
வாழ்க நீ வளமாய், அதனால் நாங்கள் வாழ்வோம் நலமாய்!
உன் இருப்பின் பொருள் உணர்ந்து, உன் நலனில் அக்கறை கொள் இனி வரும் நாட்களில்.
பிறந்த நாள் வாழ்துக்கள் அண்ணா!
(நம்பிக்கை என்ற ஒரு சொல்லின் பின் நின்று இந்த பாசமலர்கள் இன்றும் இணைந்திருக்க காரணமான
நவீன், கவுதமிக்கு எங்களின் அளவில்லா நன்றிகள்)
Naveen Kumar, Sasi Rekha Praveen and 21 others
11 Comments
Like
Comment

Comments

Popular posts from this blog

பாலியல் பிரச்சனைகள்

உலகெங்கும் நடக்கும் பெண்களுக்கு எதிரான அநீதிகளில் பாலியல் கொடுமைலளுக்கு தான் முதலிடம் தரலாம். அதிலும் இந்தியாவில் நடக்கும் பாலியல் வக்கிரங்களை division sub division கொண்டும் பிரிக்கலாம் போல .வருடத்திற்கு அல்ல நாள் ஒன்றிற்கு நடக்கும் பாலியல் பிரச்சனைகள் (அதும் வெளியில் தெரியும்) புள்ளி விவரங்களை கேட்டால் அதிர்ந்துபோவோம் நாம் அனைவரும். ஆனால் அந்த ஒரு நிமிடம் மட்டுமே! அடுத்த வீட்டுக்கு நடக்கும் அநீதிகளுக்கு "அச்சசசோ" என்று பரிதாபம் காட்டிவிட்டு நமக்கு நடக்காதவரை நல்லது என்று கடந்து போய்கொண்ட இருக்கிறோம் அனைவரும். கடல் போன்ற பிரச்சனையின் துளி தெரியும் நமக்கு, முழுவதும் தெரியாமல் போவது இன்னும் பெரிய அவலம். நாள்தோறும் கற்பழிப்பு பற்றிய செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது தொலை காட்சியிலும். செய்தி தாள்களிலும். அறிந்து கொண்டே தான் இருக்கிறோம், அதை தாண்டி நகர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். புள்ளிவிவரங்களால் பெருகி வரும் இந்த பிரச்சனையின் மூலமும், வரும் காலமும் குறித்த புரிதல் இல்லாமல் இருப்பது பெரும் துயரம். இந்த பிரச்னை குறித்து விவாதிக்க துவங்கும் பொழ...
பணி பெண் ஒருத்தி !!!!!!!!!!!!!!!!!! முழுவதுமாய் உலராமல் ஈரம் படிந்த கூந்தலுடன் பணிக்கு ஆயத்தமாவாள், அமர்ந்திருக்கும் அழகு பெண்ணின் முடி உலர்த்த, அது முடிந்து புருவம் திருத்துகிறாள் மாறி மாறி ,ஆடி கொடுத்து ஒப்புதல் பெற சரியென்பவர் எவருமிருப்பதில்லை, திருத்தம் சொல்ல மீண்டும் திருத்துவாள், அதன் பிறகு அறையடி கூந்தலை காலும் அறையுமாக்குவாள் கூந்தலை முடியா சபதமேற்ற பெண்களுக்கு, இடை இடையே அவள் நிறுவன தயாரிப்புகளுக்கு இவளே விளம்பர நிர்வாகியாகி விற்பனைக்கு மெனக்கெடுவாள் ப்ளீச் என்போரிடம் கூடவே பேசியலுக்கும், வேக்ஸ்ங் செய்வோரிடம் பெடி-க்யூர்-க்கும் சிபாரிசு செய்து வந்திருக்கும் பெண்ணின் அழகுக்கும், அவள் முதலாளியின் லாப கணக்கிற்கும் பாடுபடுவாள், இரவின் முகப்பில் இறுக்கி பிடித்த ஜீன்ஸ் பேண்ட களைந்து சுடிதார் துப்பட்டாவிற்கு மாறி இப்போது காய்ந்திருக்கும் தலையை பின்னி முடித்து அலங்காரம் கலைத்து வீடு திரும்புவாள் அழகு நிலைய பணி பெண் ஒருத்தி !!!!!!!!!!!!!!!!!!  

சொல்லதீங்க! Please!

ஒருவர் ஹெலிகாப்டரில் வந்திறங்குகிறார், இன்னொருவர் வரும் முன்பு வெப்பத்தை தணிக்க ஒரு லாரி தண்ணீர் தெளிக்க படுகிறது. மற்றொருவர் பிரச்சார  மேடையில் ஒன்றிற்கு நான்காய் air cooler  நிற்கிறது. பிரச்சார சமயங்களில் கூட வெயிலையும் சந்திக்காது, அவர்களது சுகபோகங்களையும் இழக்காத இவர்களுக்கெல்லாம் மின் வெட்டு  என்பது என்னவென்றே தெரியாது. மின்வெட்டை ஒழிப்போம் என்றும் சொல்லும் எல்லா அரசியல் தலைவர்களும் மின் வெட்டு என்பதை முழுவதும் அல்ல கொஞ்சமும் அறியாதவர்கள். அதனால தயவது செய்து உங்களது எல்லா தேர்தல் பிரச்சாரங்களிலும், Letter-ல  இப்படிக்கு சேக்குரமாதிரி, மின் வெட்டை ஒழிப்போம், கச்ச தேவை மீட்போம்-னு சொல்லதீங்க!  Please!