அடுத்த வீட்டுக்கு நடக்கும் அநீதிகளுக்கு "அச்சசசோ" என்று பரிதாபம் காட்டிவிட்டு நமக்கு நடக்காதவரை நல்லது என்று கடந்து போய்கொண்ட இருக்கிறோம் அனைவரும்.
கடல் போன்ற பிரச்சனையின் துளி தெரியும் நமக்கு, முழுவதும் தெரியாமல் போவது இன்னும் பெரிய அவலம். நாள்தோறும் கற்பழிப்பு பற்றிய செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது தொலை காட்சியிலும். செய்தி தாள்களிலும். அறிந்து கொண்டே தான் இருக்கிறோம், அதை தாண்டி நகர்ந்து கொண்டே தான் இருக்கிறோம்.
புள்ளிவிவரங்களால் பெருகி வரும் இந்த பிரச்சனையின் மூலமும், வரும் காலமும் குறித்த புரிதல் இல்லாமல் இருப்பது பெரும் துயரம். இந்த பிரச்னை குறித்து விவாதிக்க துவங்கும் பொழுதுகளில் எல்லாம் பெண்களின் நடத்தை, உடை கலாச்சாரம் குறித்து அர்த்தம் இன்றி பேசி பிரச்னையின் வீரியம் புரியாமல் அதை திசைதிருப்பி விடுகிறார்கள் சில அறிவி ஜீவிகள்.
(அடக்கி) ஆள பிறந்தவன் ஆண் என்று சொல்லியும் சொல்லாமலும் நம் மனதில் ஆழ பதிந்து போனது தான் பிரச்சனையை தான் இதன் வேர் என்பதை மறுப்பதற்கில்லை.
"தோசையம்மா தோசை அம்மா சுட்ட தோசை
அப்பாவுக்கு 4
அம்மாவுக்கு 3
அன்னனுக்கு 2
பாப்பாவுக்கு 1"
என்று 1-ஆம் வகுப்பிலேயே தோசை செய்யும் அம்மாவுக்கு 3, சும்மாயிருக்கும் அப்பாவுக்கு 4
என்று உணவுக்கான பங்கீடு கூட சொல்லி தரப்படுகிறது ஆணாதிக்க விதிகளுக்கு இணங்கி.
இப்படி பாடத்தில், வாழ்கை முறையில் எப்படியோ தொன்று தொட்டு ஆணாதிக்கம் மறுக்கவே முடியாத ஒன்றாகி போனது .
கால பெரு வெளியில் இவை மாற்றம் அடைய துவங்கி இருககிறது என்றாலும் , எப்போது எந்த அளவில் இந்த மாற்றம் நடக்கும் என்பதற்கு கண்ணுக்குகெட்டிய வரையில் எந்த உத்திரவாதமும் இல்லை.
தந்தை மகளிடம் , சகோதரன் சகோதரியிடம் , தாத்தா பேத்தியிடம் போன்ற விதி விலக்குகளை தவிர்த்து பார்த்தால் (இந்த விதிவிலக்குகளின் கணக்கை பார்த்தால் இவைகளும் கூட விதிவிலகற்றதாகி போய்விடும் போல)
14-18 வயதிடையே இருக்கும் பெண்களுக்கு தான் பாலியால் கொடுமைகள் அதிகம் நடப்பதாக புள்ளிவிபரங்கள் சொன்னாலும் ,
பதின் பருவத்தை கூட அடையாத 3 வயது 5 வயது 8 வயது குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள் கொடுமைகளினும் அதி பயங்கரமானவை.
குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வக்கிரங்களை காட்டிலும் பயங்கரமானவை சமூகத்தில் இருக்கவே முடியாது.
பெண்களை ஒரு சமூகம் எப்படி நடத்துகிறதோ அதை கொண்டே தீர்மானிக்க முடியும் அது எத்தனை பண்பட்ட சமூகம என்பதை .
அப்படியானால்
3 வயது பெண் குழந்தைகளை கூட போக பொருளாக பார்க்கும் மனிதர்களை கொண்ட நம் சமூகம் எப்படி பட்டது?
இந்த பிரச்சனைகளின் வேர்களையும் விளைவுகளையும் அறியாதவர்கள் திரைப்படங்கள் தான் இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.
எனக்கு தெரிந்து 3 வயது 5 வயது குழந்தைகளை பாலியல் தொல்லைகள் கொடுக்கும் எந்த காட்சிகளும் திரைப்படங்களில் வரவில்லை என்றே நினைக்கிறேன்.
கவர்ச்சி நடனங்களும், காட்சிகளும், அவர்கள் அணியும் ஆடைகளும் தான் இதற்கு காரணம் என்று திரைப்படங்களை மட்டும் குறை கூறுவோர்,
"அம்பேத்கார், பாரதி , பெரியார், காந்தி"
போன்ற தலைவர்களின் வாழ்வியல் குறித்த திரைப்படங்களிலிருந்து நீங்கள் கற்றது என்ன ?
ஆண்களின் பார்வை பெண்கள் மீது எப்படி இருக்கிறது என்பதற்கு சினிமாவிற்கும் பங்கு உண்டு என்ற போதும் முழுவதும் திரைப்படங்களை மட்டுமே குற்றம் சாட்டுவது சரியல்ல.
ஒரு பெண் பாலியல் தொழிலாளி என்ற போதும் அவள் விருப்பதிற்கெதிராய் நடத்தப்படும் கற்பழிப்புகளை இச்சமூகம் கருத்தில் கொள்வதே இல்லை என்பது எத்தனனை பெரிய துயரம் .
100 சதவிகிதம் தேர்ச்சிக்கு உறுதி கூறும் பள்ளிகள் எதுவும் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு
100 சதவிகிதம் உறுதி கோருவதில்லை என்றானபின்
நம் பெண்பிள்ளைகளின் பாதுகாப்புக்கு சமூகத்தையும், அரசையும், பள்ளிகளையும் மட்டும் குறை கூறி கொண்டிராமல்
இனி பிள்ளைகளின் பாதுகாப்புக்கு வீட்டிலேயே தொடுதல் குறித்த புரிதல் ஏற்படுத்தல் அவசியம் ஆகி போனது.
தொடுதல் தொடர்பான விபரங்களை சொல்லி தர வேண்டும் ( #GoodTouch, #BadTouch)
இதையும் கூட அம்மா தான் சொல்லிதர வேண்டும் என்று கோடுகளை கிழிக்காமல் தந்தையும் கூட சொல்லி தரலாம் . முடிந்தால் நம் வீட்டில், நம்முடன் பணி செய்பவர்களின் குழந்தைகளுக்கு சொல்லி தர சொல்லி அறிவுறுத்துவோம்.
இப்படி பெற்றோரே பாலியல் பிரச்னைகளை விளக்குவதன் மூலம் குழந்தைகளின் பயம் பயம் விலக வழி செய்யும். தொடுதலின் நோக்கம் குறித்த விபரங்களை நம்மால் அவர்களை இன்னும் சிறப்பாய் தெளிவு படுத்த முடியும்.
நாமே இது குறித்து பிள்ளைகளிடம் விவாதிப்பதன் மூலம் பாலியல் குறித்த தவறான புரிதலில்,
வழிகாட்டுதளிலிருந்து பதின் பருவங்களில் அவர்களை நேர்படுத்தலாம்.
மேலும் நம்மிடம் எதையும் பகிரலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்தும்.
அதுவும் தவிர தற்போது இதை தவிர நமக்கு வேறு வழியில்லை என்ற படியால் !
நம் குழந்தைகளிடம் சில சமயம் தவறாக நடப்பவர் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களாகவும், விருப்பமானவர்களாகவும் கூட இருக்கலாம்.
எனவே அவர்களை பற்றி சொல்ல தயங்கும் பிள்ளைகளுடன் யாராக இருப்பினும் சொல்
பரவாயில்லை என்று வார்த்தைகளை அடிக்கடி சொல்லுங்கள்.
இனி மேலும்நண்பர்களே ,
சமுக வலைதளங்களில் சமூக விழிப்புனர்வு குறித்த தகவல்கள், கட்டுரைகள், விழிப்புனர்வு விளம்பரங்கள் , படங்கள் போன்றவற்றையும் பகிர்வோம் மேபட்ட சமூக மாற்றத்திற்கு நம்மால் ஆன பங்கை தருவோம்!
ஆண் பெண் உறவு குறித்தும், சமத்துவம் குறித்த சிந்தனைகள் குறித்தும் குழந்தை பருவங்களிளிருந்து கற்பிக்க தவருவோம் எனில், அடுத்த தலை முறையிலாவது இந்த பாலியல் வக்கிரங்கள் மாறும் என்ற நம்பிக்கை வாயிலை நாமே அடைத்து விடுகிறோம் என்றே அர்த்தம் .
#Sexual #violence #SexualAbuse


Comments
Post a Comment