Skip to main content

Posts

Showing posts from July, 2014

பிரசவம்

பிரசவம். வலி கண்டதாய் சொல்லி பிரசவச அறையில் கிடத்துகிறார்கள். எப்படி வலி என்ற இரெண்டெழுத்து மட்டும் இதற்கு பொருந்தும் என்று தெரிய வில்லை,  நடு எழும்பிற்கு கீழே  நடக்கும் மாற்றங்கள் அத்தனை  தாங்க தக்கவையாக இராது, முனகலும் கதறலும் செவிலிகள் காதுகளுக்கு கேட்காது,. இதோ இன்னும் பத்து நிமிடம் என்று ஒவ்வொரு 10 நிமிடதிற்கும் பொய்  வாக்குறுதிகள் கொடுப்பார்கள் ஆயாக்கள், உள்ளங்கைகளை பிரியமானவர்கள் பற்றி கொண்டால் நல்லது என்றிருக்கும்,   இதன் நடுவே  பனிக்குட நீரும் குருதியுமான ஈர பிசுபிசுப்பில் வேறு  படுக்கவேண்டியதாகி போகும், தலை தெரிவதை மருத்துவர் முக்க சொல்கிறார்  அய்யோ !முனங்கவும் ! வலுவற்ற நிலையில் , அம்மா !என்று அலறி இறந்து போனேனா என எண்ண  துவங்கும் வேளையில்,  பிறந்திருக்கும் என் மகவு அழ திராணிற்று  இருக்கும் எனக்கு பதிலாய் அழுது கொண்டே !

பாலியல் பிரச்சனைகள்

உலகெங்கும் நடக்கும் பெண்களுக்கு எதிரான அநீதிகளில் பாலியல் கொடுமைலளுக்கு தான் முதலிடம் தரலாம். அதிலும் இந்தியாவில் நடக்கும் பாலியல் வக்கிரங்களை division sub division கொண்டும் பிரிக்கலாம் போல .வருடத்திற்கு அல்ல நாள் ஒன்றிற்கு நடக்கும் பாலியல் பிரச்சனைகள் (அதும் வெளியில் தெரியும்) புள்ளி விவரங்களை கேட்டால் அதிர்ந்துபோவோம் நாம் அனைவரும். ஆனால் அந்த ஒரு நிமிடம் மட்டுமே! அடுத்த வீட்டுக்கு நடக்கும் அநீதிகளுக்கு "அச்சசசோ" என்று பரிதாபம் காட்டிவிட்டு நமக்கு நடக்காதவரை நல்லது என்று கடந்து போய்கொண்ட இருக்கிறோம் அனைவரும். கடல் போன்ற பிரச்சனையின் துளி தெரியும் நமக்கு, முழுவதும் தெரியாமல் போவது இன்னும் பெரிய அவலம். நாள்தோறும் கற்பழிப்பு பற்றிய செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது தொலை காட்சியிலும். செய்தி தாள்களிலும். அறிந்து கொண்டே தான் இருக்கிறோம், அதை தாண்டி நகர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். புள்ளிவிவரங்களால் பெருகி வரும் இந்த பிரச்சனையின் மூலமும், வரும் காலமும் குறித்த புரிதல் இல்லாமல் இருப்பது பெரும் துயரம். இந்த பிரச்னை குறித்து விவாதிக்க துவங்கும் பொழ...

மீனுவின் மியாவும் ஜூ ஜூ வின்

பழுப்பு நிற கண்களோடு , பயிற்சிகள் ஏதுமின்றி மதில் மேல் நடக்கும் பூனைகளை கண்டால் மீனு குட்டிக்கு எப்போதும் மிரட்சிதான். அதிலும் இரவில் ஜன்னல் இடுக்கினுள் உடல் தளர்த்தி நுழையும் சாதுர்யம் பார்த்து அலறி அழுவாள் ! சாப்பிட அடம் பொழுதுகளிலெல்லாம் மியாவ் என்றால் மறுப்புகளின்றி நம் வேலை எளிதாய் முடியும் இதன் எதிர் மறையாய் , ஜூ ஜூ என்று சொன்ன மாத்திரத்தில் , எத்தனை அழுகையிலிருந்தும் மீண்டு விடுவாள் மீனு பாப்பா! ஈன்று பத்தே நாளான எதிர் வீடு நாய்குட்டிகள் மீது அவளுக்கு சொல்ல தெரியா பிரியம். நடவ பழகியிராத குட்டிகளை தூக்கும் போதெல்லாம் எங்கிருந்தோ வந்து விடுகிறது அவளுள் ஒரு தாயின் மாண்பு ! நழுவி இறங்கும் குட்டிகளை மீட்டெடுத்து தோளில் கிடத்தும் அழகில், உலகம் சில நொடி அப்படியே நின்றால் என்ன வென்று தோன்றும் ! அவள் உலகு அணு தினமும் மியாவும், ஜூ ஜுவும் இன்றி நகர்வதேயில்லை . அலுவல் நிமித்தமாய் நகரின் அடுக்கு மாடி குடியிருப்புக்கு புலம் பெயர்ந்த பிறகு இப்போதும் அவள் உலகில் பூனை களும் ஜூ ஜூ களும் உலவி கொண்டு தான் இருக்கின்றன . இன்னும் எத்தனை நாள் என்று...

மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை !

நேற்று மீண்டும் ஒரு பாலியல் கொடுமை. 6 வயது பள்ளி சிறுமிக்கு நடந்திருப்பது வெளி வந்திருக்கிறது. அதுவும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பள்ளி காவலாளி இரண்டு பேரால். இது நடந்திருப்பது என் மகன் புதிதாய் சேர்ந்திருக்கும் அதே பள்ளியின் மற்றொரு கிளையில். நம்பிக்கை என்பது பள்ளி கட்டிடங்களும் அங்கு அவர்கள் தரும் விளம்பர வாக்குறுதிகளும் வரவேற்பில் அமர்ந்து கனிவாய் பேசும் பெண்ணையும் சார்ந்ததல்ல என்ற புரிதலை தந்திருக்கிறது இந்த சம்பவம். இங்கு பயுலும் பெரும்பாலான மாணவ, மாணவியரின் பெற்றோர் பணிக்கு செல்பவராக இருக்கிறார்கள். தரமான கல்வியை தாண்டியும் இங்கு பிள்ளைகளை இவர்கள் சேர்க்க காரணம் after school care என்று சொல்லப்படும் ஒரு வசதி . அதாவது பெற்றோர் பணியிலிருந்து திரும்பும் வரை பிள்ளைகளை பத்திரமாய்! பார்த்து கொள்வது.(இதற்கு கூடுதல் கட்டணம் ) . இது போல கல்வி , மொழிதிறன் , பாதுகாப்பு என்று இவர்கள் தரும் வாக்குறுதிகளை நம்பி லட்சங்களை கொடுத்து சேர்கிறார்கள் பிள்ளைகளை . இந்த சம்பவத்திற்கு தனி நபர்கள் , மட்டுமில்லாது பள்ளி நிர்வாகத்திற்கும் பெரும் பங்கு இருக்கிறது . இந்த பள்ளி...