ஒற்றை எழுத்தால் குரலெடுத்து
ஆ என்றாய் ஊ என்றாய்,
சுற்றம் இருப்பவரோ அதை,
வெறும் சத்தம் என்றே எண்ணியிருக்க ,
எழுத்தொன்றும் சொல்லாகும் அற்புதம்
அது உன் மழலை மொழி
என்றறிவேன் நான் மட்டும் !
" யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும்
காணோம் "
என்றான் பாரதி .
மகளே உன் மொழி அறியாமல் போனதனால் !
Comments
Post a Comment