தவறிய குறி
எங்கள் மகவுகளின் மீது விழும் ஒவ்வொன்றும்
தவறிய குறியென கொள்ள சொல்வார்,
ஆனால்
பார்த்து பழகிய பிறகும் பயம் விட்ட பாடாய் இல்லை,
வீறிட்டபடி அவர்கள் வருவதை கண்ட யமக்கு
அதே போல் போவதை காணும் பாக்கியம் உண்டு,
எப்போது, யாருக்கு, அடுத்தது என்ற யோசனைகளுக்கு
இது மேல் என்று பின் சமன் செய்து கொள்கிறோம்,
மாறாது என்ற நம்பிக்கை கொண்ட பின்
மடிவது குறித்த பயம் ஒன்றும் இல்லை
காற்று, காவலன் என யாரும் வந்து தகவல் சொல்ல அவசியமேதுமில்லை
கண்ணெதிரே நடப்பதால்
அறிக்கைகள் அளித்து ஆகபோவது ஏதுமில்லை
ஆக
வேண்டுதலுக்கு வேலை ஒன்றும் இல்லை
பசி தவிர நமக்கானது வேறென்ன
இருத்தலின் பொருள் தெரிய
எம்மைகாட்டிலும் அதிர்ஷ்டம் செய்தவர்கள் எம்மக்களே
அவர் மக்கள் மடிவதை காண விதியற்று முன்பே போகிறார்கள்
போய் வாருங்கள், அடங்கி போவதிலும், அடக்கமாகி போதல்
நலமென்றென்னி!



Comments
Post a Comment