Skip to main content

மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை !

நேற்று மீண்டும் ஒரு பாலியல் கொடுமை. 6 வயது பள்ளி சிறுமிக்கு நடந்திருப்பது வெளி வந்திருக்கிறது.
அதுவும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பள்ளி காவலாளி இரண்டு பேரால்.

இது நடந்திருப்பது என் மகன் புதிதாய் சேர்ந்திருக்கும் அதே பள்ளியின் மற்றொரு கிளையில்.

நம்பிக்கை என்பது பள்ளி கட்டிடங்களும் அங்கு அவர்கள் தரும் விளம்பர வாக்குறுதிகளும் வரவேற்பில் அமர்ந்து
கனிவாய் பேசும் பெண்ணையும் சார்ந்ததல்ல என்ற புரிதலை தந்திருக்கிறது இந்த சம்பவம்.

இங்கு பயுலும் பெரும்பாலான மாணவ, மாணவியரின் பெற்றோர் பணிக்கு செல்பவராக இருக்கிறார்கள். தரமான கல்வியை தாண்டியும் இங்கு பிள்ளைகளை இவர்கள் சேர்க்க காரணம் after school care என்று சொல்லப்படும் ஒரு வசதி .

அதாவது பெற்றோர் பணியிலிருந்து திரும்பும் வரை பிள்ளைகளை பத்திரமாய்! பார்த்து கொள்வது.(இதற்கு கூடுதல் கட்டணம் ) .
இது போல கல்வி , மொழிதிறன் , பாதுகாப்பு என்று இவர்கள் தரும் வாக்குறுதிகளை நம்பி லட்சங்களை கொடுத்து சேர்கிறார்கள் பிள்ளைகளை .

இந்த சம்பவத்திற்கு தனி நபர்கள் , மட்டுமில்லாது பள்ளி நிர்வாகத்திற்கும் பெரும் பங்கு இருக்கிறது .

இந்த பள்ளி மட்டுமில்லாது எல்லா தனியார் பள்ளிகளில் இருக்கும் சேர்க்கை விதிகளை பார்த்தால் இந்த குற்றசாட்டு எத்தனை நிஜமென எண்ண தோன்றும் .
பள்ளி கட்டிடங்களை பார்த்து இங்கு வரும் பெற்றோரிடம், பள்ளியில் நுழைந்த நிமிடம் முதல் இவர்கள் பண வேட்டை யை துவங்கி விடுகிறார்கள்.

விண்ணப்ப படிவம் தொடங்கி அதன் பிறகு நடத்த படும் நுழைவு தேர்வு, பின்பு சேர்க்கை உறுதி செய்ய என எல்லா வற்றிற்கும் தனி தனி கட்டணம்.

லட்சங்களில் வரும் வருடத்திற்கான பள்ளி கட்டணத்தில் 60% கட்டணத்தை முதலிலேயே செலுத்தவேண்டும் .
மீதம் இருக்கும் மூன்று பருவ கட்டணங்களுக்கான தொகையை மூன்று முன் தேதியிட்ட காசோலைகளாக கொடுக்க வேண்டும்.
அடுத்தடுத்த மாதங்களில் முன்தேதியிட்ட காசோலைக்கான தேதி வரும் ஒரு வாரம் முன்பிருந்தே மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் வழியே நினைவூட்டல் தொடங்கிவிடும்.

இந்த விசயத்தில் எங்களுக்கு மறதி வரவே வரா வண்ணம் பார்த்து கொள்வார்கள் இவர்கள் மிக கவனமாக.
இப்படி வருட கட்டணம் முழுதும் oct முதல் வாரத்திலேயே முழுவதுமாக செலுத்தி விட வேண்டும் .

தாங்கள் ஓடுவதே தங்கள் பிள்ளைகளுக்காக என்ற படியால் பெற்றோர்கள் இதை பெரிதாய் எடுத்து கொள்வதில்லை .
தரமான கல்வியும், பாதுகாப்பும் இதுபோன்ற பள்ளிகளில் தான் கிடைக்கும் என்று நம்பி பணத்தை கொட்டி கொடுக்கிறார்கள்.
பண விவகாரத்தில் இத்தனை அக்கறை காட்டும் இவர்களின், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அலட்சியம் நிச்சயம் கண்டத்திற்குரியது .
இதனால் உலகின் பாதுகாப்பான இடம் தாயின் கருவறைக்கு பிறகு கல்வி அறை என்ற நம் எண்ணம் சிதறி போகிறது.

LKG- இலிருந்து UKG போகும் குழந்தைக்கு written test, personal interview என தகுதிகள் கோரும் இவர்கள் , வெறும் கல்வி சான்றிதழ்களை மட்டும் வைத்து எப்படி இது போன்ற ஆண் ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள் என்று தெரிய வில்லை .

previous school mark sheet and conduct certificate must என்று 1 ஆம் வகுப்பு குழந்தையின் சேர்கைக்கு நிபந்தனை விதிக்கும் இவர்கள் , எந்த conduct certificate அடிப்படையில் watchman, security, driver, cleaner, lab assistant போன்ற ஆண் பணியாளர்களை வேலைக்கு நியமிக்கிறார்கள் என்றும் தெரிய வில்லை.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பயப்படும் சூழல் உருவாகியிருக்கிறது இவர்களின் அலட்சியத்தால் .
பணம் குறித்து பல வாக்குறுதிகள் நீங்கள் கோரும்போதும் , எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு நாங்கள் பதில் வாக்குறுதிகள் கோராததின் காரணம் இவை பள்ளிகள், நிதி நிறுவனங்கள் அல்ல என்ற காரணத்தால் மட்டுமே.

ஆனால் இனி வாக்குறுதிகள் அன்றி பள்ளிக்கு அனுப்ப தயங்குகிறார்கள் பெற்றவர்கள்.
எதன் அடிப்படையில் இனி பள்ளிகளை தேர்வு செய்ய ?

ஆண் ஆசிரியர்கள் பணியாளர்கள் இல்லாத பள்ளியை தேட வேண்டுமா பெண் பிள்ளைகளை சேர்க்கும் போது?
.
இந்த குற்றவாளிகளின் தண்டனை இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது என்ற உறுதியை தரும். என்றால் இதற்கு முன்பு நடந்த பாலியல் குற்றங்களுக்கு கிடைத்த தண்டனையால் இது நடந்திருக்காதே உடற் கல்வி வகுப்பின் போதும் ஆண் ஆசிரியர்களோடு பெண் ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க வேண்டுமா ?

பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றவர்களுக்கு இது போன்ற நூறு கேள்விகள் மாறி மாறி வந்து விழுகிறது.
பள்ளிகளில் நடக்கும் பாலியல் கொடுமைகளை விடவும் வேறு பயங்கரவாதம் சமூகத்தில் இருக்க முடியாது.
இதற்கு கல்வி நிறுவனங்களும் , அரசும் என பதில் சொல்ல போகிறது ?

Comments

Popular posts from this blog

பாலியல் பிரச்சனைகள்

உலகெங்கும் நடக்கும் பெண்களுக்கு எதிரான அநீதிகளில் பாலியல் கொடுமைலளுக்கு தான் முதலிடம் தரலாம். அதிலும் இந்தியாவில் நடக்கும் பாலியல் வக்கிரங்களை division sub division கொண்டும் பிரிக்கலாம் போல .வருடத்திற்கு அல்ல நாள் ஒன்றிற்கு நடக்கும் பாலியல் பிரச்சனைகள் (அதும் வெளியில் தெரியும்) புள்ளி விவரங்களை கேட்டால் அதிர்ந்துபோவோம் நாம் அனைவரும். ஆனால் அந்த ஒரு நிமிடம் மட்டுமே! அடுத்த வீட்டுக்கு நடக்கும் அநீதிகளுக்கு "அச்சசசோ" என்று பரிதாபம் காட்டிவிட்டு நமக்கு நடக்காதவரை நல்லது என்று கடந்து போய்கொண்ட இருக்கிறோம் அனைவரும். கடல் போன்ற பிரச்சனையின் துளி தெரியும் நமக்கு, முழுவதும் தெரியாமல் போவது இன்னும் பெரிய அவலம். நாள்தோறும் கற்பழிப்பு பற்றிய செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது தொலை காட்சியிலும். செய்தி தாள்களிலும். அறிந்து கொண்டே தான் இருக்கிறோம், அதை தாண்டி நகர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். புள்ளிவிவரங்களால் பெருகி வரும் இந்த பிரச்சனையின் மூலமும், வரும் காலமும் குறித்த புரிதல் இல்லாமல் இருப்பது பெரும் துயரம். இந்த பிரச்னை குறித்து விவாதிக்க துவங்கும் பொழ...
பணி பெண் ஒருத்தி !!!!!!!!!!!!!!!!!! முழுவதுமாய் உலராமல் ஈரம் படிந்த கூந்தலுடன் பணிக்கு ஆயத்தமாவாள், அமர்ந்திருக்கும் அழகு பெண்ணின் முடி உலர்த்த, அது முடிந்து புருவம் திருத்துகிறாள் மாறி மாறி ,ஆடி கொடுத்து ஒப்புதல் பெற சரியென்பவர் எவருமிருப்பதில்லை, திருத்தம் சொல்ல மீண்டும் திருத்துவாள், அதன் பிறகு அறையடி கூந்தலை காலும் அறையுமாக்குவாள் கூந்தலை முடியா சபதமேற்ற பெண்களுக்கு, இடை இடையே அவள் நிறுவன தயாரிப்புகளுக்கு இவளே விளம்பர நிர்வாகியாகி விற்பனைக்கு மெனக்கெடுவாள் ப்ளீச் என்போரிடம் கூடவே பேசியலுக்கும், வேக்ஸ்ங் செய்வோரிடம் பெடி-க்யூர்-க்கும் சிபாரிசு செய்து வந்திருக்கும் பெண்ணின் அழகுக்கும், அவள் முதலாளியின் லாப கணக்கிற்கும் பாடுபடுவாள், இரவின் முகப்பில் இறுக்கி பிடித்த ஜீன்ஸ் பேண்ட களைந்து சுடிதார் துப்பட்டாவிற்கு மாறி இப்போது காய்ந்திருக்கும் தலையை பின்னி முடித்து அலங்காரம் கலைத்து வீடு திரும்புவாள் அழகு நிலைய பணி பெண் ஒருத்தி !!!!!!!!!!!!!!!!!!  

சொல்லதீங்க! Please!

ஒருவர் ஹெலிகாப்டரில் வந்திறங்குகிறார், இன்னொருவர் வரும் முன்பு வெப்பத்தை தணிக்க ஒரு லாரி தண்ணீர் தெளிக்க படுகிறது. மற்றொருவர் பிரச்சார  மேடையில் ஒன்றிற்கு நான்காய் air cooler  நிற்கிறது. பிரச்சார சமயங்களில் கூட வெயிலையும் சந்திக்காது, அவர்களது சுகபோகங்களையும் இழக்காத இவர்களுக்கெல்லாம் மின் வெட்டு  என்பது என்னவென்றே தெரியாது. மின்வெட்டை ஒழிப்போம் என்றும் சொல்லும் எல்லா அரசியல் தலைவர்களும் மின் வெட்டு என்பதை முழுவதும் அல்ல கொஞ்சமும் அறியாதவர்கள். அதனால தயவது செய்து உங்களது எல்லா தேர்தல் பிரச்சாரங்களிலும், Letter-ல  இப்படிக்கு சேக்குரமாதிரி, மின் வெட்டை ஒழிப்போம், கச்ச தேவை மீட்போம்-னு சொல்லதீங்க!  Please!