இதோ இன்னும் பத்து நிமிடம் என்று ஒவ்வொரு 10 நிமிடதிற்கும் பொய் வாக்குறுதிகள் கொடுப்பார்கள் ஆயாக்கள்,
உள்ளங்கைகளை பிரியமானவர்கள் பற்றி கொண்டால் நல்லது என்றிருக்கும்,
பனிக்குட நீரும் குருதியுமான ஈர பிசுபிசுப்பில் வேறு
படுக்கவேண்டியதாகி போகும்,
தலை தெரிவதை மருத்துவர் முக்க சொல்கிறார்
அய்யோ !முனங்கவும் ! வலுவற்ற நிலையில் ,
அம்மா !என்று அலறி இறந்து போனேனா என எண்ண துவங்கும் வேளையில்,
பிறந்திருக்கும் என் மகவு
அழ திராணிற்று இருக்கும் எனக்கு பதிலாய் அழுது கொண்டே !
பிறந்திருக்கும் என் மகவு
அழ திராணிற்று இருக்கும் எனக்கு பதிலாய் அழுது கொண்டே !
Comments
Post a Comment