Skip to main content

காதலோடு

உங்கள் காதல் கதையை எதற்கு எங்களிடம் என்றால் ,
வாழ்வின் சந்தோஷங்களை, வலிகளை, துயரங்களை, முடிவுகளை, , நண்பர்களிடம் தானே சொல்லுவோம். இல்லையா?
அது தான்,
வாழ்வின் வெற்றி, சந்தோஷம் ஏதோ இது !
 
காதலின் மூலம் தெரியாது, ஆழம் தெரியும் காதலித்தவர்கும்,
காதலிக்காதவர்கும். 

       "காதல்"
 இந்த ஒன்றை கொண்டே
100000 ஹய்கூ  பிறக்கலாம்
10000 கவிதைகள் எழுதலாம்,
1000 சிறுகதைகள் உருபெறலாம்
100 நாவல்களுக்கான கரு உண்டு
குறும்படங்கள், திரைப்படங்கள் இன்னும் பல நூற்றாண்டு இதை தவிர்த்து சொல்ல இயலாத காரியம்.

அந்த காதல் என்னை மட்டும் விடுமா என்ன?

   "நாங்கள்" மற்றவரை போல அல்ல, என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன்.

காதலெனும் வரம் பெற்ற அத்தனை  பேரை போல தான் நாங்களும்.
"பேறு" பெற்றவர்கள்.
 
இருவரும் அவரவர் கொள்கைகளை ஏற்க நிர்பந்தித்திருக்கிறோம்.ஆனால்
பெரும்பாலான சமயங்களில் அவரவர் கொள்கைகளிலேயே பிடிவாதமாய் நின்றிருக்கிறோம். கோபம் வருவதுண்டு அவ்வபோது, ஆனால் மறுகணமே
எங்களின் காதல் அது அத்தனையும் புறந்தள்ளி எம் நெருக்கத்தின்
அடர்த்தியை கூட்டிவிடும்.

இனி அவனிடம் கொஞ்சம்!

கரம் பிடித்தோ, காதலித்தோ, காதலை சொல்லியோ எத்தனை வருடம் என்ற புள்ளி விபரம் வேறு வேறு.
ஆனால்  நீ  யார் என்பது தெரியும் முன்பே நீ  என்னில் ஒரு புள்ளியாய் நின்ற தருணம் இது. 
  
வருங்காலம் என்னை உன்னுடன் எந்த உறவாய் இணைக்க போகிறது என்ற புதிர் தெரியாமலே காரணங்கள் அற்று ஒரே ஒரு நொடி உன் பார்வைகளால் என்னை நிறைத்து போனாய் .

பெண்ணியம் பேசி வாதிடும் பொளுதுகளிளெல்லாம் புன்னகையால் கடந்து 'ஆணவம் ஆணவம்" என்பாய். அது ஆணவம் இல்லை அடிப்படை உரிமை  
என்பேன்.
விவாதங்கள் அத்தனைக்கும் காதலாய் முடிவுரை சொல்வாய்.
என்னை "திமிர்" சொன்னாலும் கூட அந்த திமிர் தான் உனக்கு
பிடித்திருக்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறேன் இதுவரை.
அது ஒன்றே என் "திமிர்" கூட காரணம்.

ஒட்டி செல்லும் நொடிகள் யாவும்  குறை கூறி வெருப்பேற்றுகிறாய்,
உச்சாணி கொம்பில் அமர்ந்து உன்னை ஏளனம் தருணங்களில் ரசிக்கிறாயே!
அதன் மர்மம் கொஞ்சம் சொல்ல கூடாதா?

முரண் எப்போதும் மோதலில் முடியும்,
நம்மில் மட்டும் காதலாய் முடியும்!

சிரிப்பு, கோபம், அழுகை , அணைப்பு, வெறுப்பு , விவாதம், சண்டை  
இவை அத்தனைக்குமே நம் அகராதியில் காதல் என்ற மறு பெயர் உண்டு.
காதலுக்கு மட்டும் பெருங்காதல் என்ற பெயர்.

வினோதம் இல்லையா ? எனக்கு மட்டுமல்ல காதலோடு நகரும்
வாழ்வை பெற்ற அனைவருக்கும் இதே போல் தான்.

ஏற்கனவே நான் உணர்ச்சி களஞ்சியம் எனவே அளவோடு காதல் செய் என்று எத்தனை முறை உன்னிடம் சொல்வது,
அதன் பலனே உலகம், அரசியல், பெண்ணியம், சாதியம் என முற்போக்காய் பேச நிறைய இருந்தும் உன்னை தாண்டி பேசுவதும் இல்லை, எழுதுவதும் இல்லை.

பிறவிகள் ஏழென்ற கதை எனக்கும் தெரியும்,
அதை காரணம் சொல்லி காதல் செய்ய அவகாசம் கோராதே!

உலகில்  அறியமுடியா புதிர் நாளை என்பதால் இயன்றவரை இப்போதே காதல் செய் !

நானும் இருக்கும் வரை அதையே செய்வேன் உன்னை காட்டிலும் பல நூறு  மடங்காய்!

காதலுடன் !

Comments

Popular posts from this blog

பாலியல் பிரச்சனைகள்

உலகெங்கும் நடக்கும் பெண்களுக்கு எதிரான அநீதிகளில் பாலியல் கொடுமைலளுக்கு தான் முதலிடம் தரலாம். அதிலும் இந்தியாவில் நடக்கும் பாலியல் வக்கிரங்களை division sub division கொண்டும் பிரிக்கலாம் போல .வருடத்திற்கு அல்ல நாள் ஒன்றிற்கு நடக்கும் பாலியல் பிரச்சனைகள் (அதும் வெளியில் தெரியும்) புள்ளி விவரங்களை கேட்டால் அதிர்ந்துபோவோம் நாம் அனைவரும். ஆனால் அந்த ஒரு நிமிடம் மட்டுமே! அடுத்த வீட்டுக்கு நடக்கும் அநீதிகளுக்கு "அச்சசசோ" என்று பரிதாபம் காட்டிவிட்டு நமக்கு நடக்காதவரை நல்லது என்று கடந்து போய்கொண்ட இருக்கிறோம் அனைவரும். கடல் போன்ற பிரச்சனையின் துளி தெரியும் நமக்கு, முழுவதும் தெரியாமல் போவது இன்னும் பெரிய அவலம். நாள்தோறும் கற்பழிப்பு பற்றிய செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது தொலை காட்சியிலும். செய்தி தாள்களிலும். அறிந்து கொண்டே தான் இருக்கிறோம், அதை தாண்டி நகர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். புள்ளிவிவரங்களால் பெருகி வரும் இந்த பிரச்சனையின் மூலமும், வரும் காலமும் குறித்த புரிதல் இல்லாமல் இருப்பது பெரும் துயரம். இந்த பிரச்னை குறித்து விவாதிக்க துவங்கும் பொழ...
பணி பெண் ஒருத்தி !!!!!!!!!!!!!!!!!! முழுவதுமாய் உலராமல் ஈரம் படிந்த கூந்தலுடன் பணிக்கு ஆயத்தமாவாள், அமர்ந்திருக்கும் அழகு பெண்ணின் முடி உலர்த்த, அது முடிந்து புருவம் திருத்துகிறாள் மாறி மாறி ,ஆடி கொடுத்து ஒப்புதல் பெற சரியென்பவர் எவருமிருப்பதில்லை, திருத்தம் சொல்ல மீண்டும் திருத்துவாள், அதன் பிறகு அறையடி கூந்தலை காலும் அறையுமாக்குவாள் கூந்தலை முடியா சபதமேற்ற பெண்களுக்கு, இடை இடையே அவள் நிறுவன தயாரிப்புகளுக்கு இவளே விளம்பர நிர்வாகியாகி விற்பனைக்கு மெனக்கெடுவாள் ப்ளீச் என்போரிடம் கூடவே பேசியலுக்கும், வேக்ஸ்ங் செய்வோரிடம் பெடி-க்யூர்-க்கும் சிபாரிசு செய்து வந்திருக்கும் பெண்ணின் அழகுக்கும், அவள் முதலாளியின் லாப கணக்கிற்கும் பாடுபடுவாள், இரவின் முகப்பில் இறுக்கி பிடித்த ஜீன்ஸ் பேண்ட களைந்து சுடிதார் துப்பட்டாவிற்கு மாறி இப்போது காய்ந்திருக்கும் தலையை பின்னி முடித்து அலங்காரம் கலைத்து வீடு திரும்புவாள் அழகு நிலைய பணி பெண் ஒருத்தி !!!!!!!!!!!!!!!!!!  

சொல்லதீங்க! Please!

ஒருவர் ஹெலிகாப்டரில் வந்திறங்குகிறார், இன்னொருவர் வரும் முன்பு வெப்பத்தை தணிக்க ஒரு லாரி தண்ணீர் தெளிக்க படுகிறது. மற்றொருவர் பிரச்சார  மேடையில் ஒன்றிற்கு நான்காய் air cooler  நிற்கிறது. பிரச்சார சமயங்களில் கூட வெயிலையும் சந்திக்காது, அவர்களது சுகபோகங்களையும் இழக்காத இவர்களுக்கெல்லாம் மின் வெட்டு  என்பது என்னவென்றே தெரியாது. மின்வெட்டை ஒழிப்போம் என்றும் சொல்லும் எல்லா அரசியல் தலைவர்களும் மின் வெட்டு என்பதை முழுவதும் அல்ல கொஞ்சமும் அறியாதவர்கள். அதனால தயவது செய்து உங்களது எல்லா தேர்தல் பிரச்சாரங்களிலும், Letter-ல  இப்படிக்கு சேக்குரமாதிரி, மின் வெட்டை ஒழிப்போம், கச்ச தேவை மீட்போம்-னு சொல்லதீங்க!  Please!