Skip to main content

Posts

  வசவு வார்தைகள் அதிகம் அறியாதவன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, பாவம் ! ஆதிமொழியின் வசவு வார்தைகள் அதிகம் அறியாதவன் போல நீ, கோபத்தின் கடைநிலையில் அல்லது முதல் நிலையிலேயோ இது ஒன்றை கொண்டே வாயடைக்க செய்து பழகி போனாய், சொற்கள் அதிகம் அறியா உம்மை பழித்தீர்க்க சொல் ஒன்று தேடிபார்கையில் எங்கள் உறுப்புகள் குறித்த வார்தைகள் தான் சிதறி கிடக்கிறது, பகிர்ந்தளிக்க இது பொருளிள்லை, உயிர் என்று சொல்ல துணிவற்றவன் தலைவனாவான் அவன் மனைவி வேசியாவாள் சபைதனில், ஆக- இது எனக்கு மட்டும் புதிதல்ல, பொது இடம், பொருள், ஏவல் மட்டும் மாறலாம், பெண்ணை வீழ்த்தும் பேராயுதம் இதுவென நம்பியே வளர்க்க பட்டீர் நீங்கள் என்ன செய்வீர் ! விலை பேசியவர்கள் பெயற்றும், பொருளாகி போனவளை விலை மாதுவென பெயரிட்ட முன்னோடிகளின் வழி வந்த உன்னை சொல்லி பலன் ஏதும் இல்லை, வக்கற்ற ஒருவனால் சிலர் பெயராகவும், சிலர் செயலாகவும் சாட்சியங்களோடு கை பிடிக்கும் நாங்கள் அவ்வப்போது பெயராக மட்டும், இப்போது முத்தங்கள் இட்டு மன்னிப்பு கோருகிறாய் குண்டு வீசி மாய்த்த பின் உணவு பொட்டலங்கள் தருவதை போன்று கட்டுண்ட பின் மாற்றென்ன மன்னிப்பதை தவி...
தவறிய குறி   எங்கள் மகவுகளின் மீது விழும் ஒவ்வொன்றும் தவறிய குறியென கொள்ள சொல்வார், ஆனால் பார்த்து பழகிய பிறகும் பயம் விட்ட பாடாய் இல்லை, வீறிட்டபடி அவர்கள் வருவதை கண்ட யமக்கு அதே போல் போவதை காணும் பாக்கியம் உண்டு, எப்போது, யாருக்கு, அடுத்தது என்ற யோசனைகளுக்கு இது மேல் என்று பின் சமன் செய்து கொள்கிறோம், மாறாது என்ற நம்பிக்கை கொண்ட பின் மடிவது குறித்த பயம் ஒன்றும் இல்லை காற்று, காவலன் என யாரும் வந்து தகவல் சொல்ல அவசியமேதுமில்லை கண்ணெதிரே நடப்பதால் அறிக்கைகள் அளித்து ஆகபோவது ஏதுமில்லை ஆக வேண்டுதலுக்கு வேலை ஒன்றும் இல்லை பசி தவிர நமக்கானது வேறென்ன இருத்தலின் பொருள் தெரிய எம்மைகாட்டிலும் அதிர்ஷ்டம் செய்தவர்கள் எம்மக்களே அவர் மக்கள் மடிவதை காண விதியற்று முன்பே போகிறார்கள் போய் வாருங்கள், அடங்கி போவதிலும், அடக்கமாகி போதல் நலமென்றென்னி! 14 Sankar Narayanan, Kalaivani Balan and 12 others 1 Comment Like Comment
  பிரியங்கள் என்பது வெறும் பரிசுகள் அல்ல! பிறந்தநாள் வாழ்த்துக்களும் கட்டாயமல்ல! என் பிறந்தநாளில் தங்கள் அன்பை வாழ்த்துக்களாய் சொன்ன அத்தனைபேருக்கும் நன்றி! இந்நாள் முழுதும் வாழ்த்துக்கலாள் நிறைந்திருக்க, என் வாழ்நாள் முழுதும் நிறையும் இணையொன்று சொல்ல எதுமற்ற பேரன்பை பரிசாய் தந்தான் என் மகன், இன்றும் நேற்றை போலவே, நாளையை போலவே என்பதை ஏற்று கொள்ளாதவன் அவன் எல்லா குழந்தைகளை போல, அவனை பொறுத்தமட்டில் பிறந்தநாள் என்பது எல்லா வகையிலும் சிறந்தநாள்! வாழ்த்த மறந்த நட்புகள், உறவுகள் அத்தனை பேருக்கும் phone செய்து நினைவூட்டினான், வாழ்த்தக்களும், அன்புமே என்னை மகிழ்விக்கும் என்று பெருநம்பிக்கை கொண்டிருந்தான்! அவனாய் மெனக்கெட்டு நேற்று செய்த பரிசொன்று தந்தான்! என்னை புத்தாடை அணிய சொல்லி, இல்ல பணிகளிருந்து தற்காலிக விடுப்பு எடுக்க கட்டாயபடுத்தி, தங்கையை இன்று முழுவதும் அவனே பேணபோவதாய் வாக்குறுதி தந்து, கடைசியாய் இந்த புகைப்படத்திற்கு என்னை திருத்தி, என் பிள்ளையின் இந்த பிரியத்தை, அன்பை, அக்கறையை தவிர வேறென்ன பரிசு வேண்டும் இந்நாளில், இப்படியாக என் பிறந்த நாள் முடிந்தது நான் பிறந்ததின் பொருள் உணர...