ஆண்களாய் இருப்பது ................... அடக்கவேண்டிய அவசியமேதும் இருப்பதில்லை , தோன்றும் கணத்தில் கழிக்கலாம் தெரு ஓரங்களில் கூட, கூட்ட நெரிசலில் வேர்த்து போனால் கவலை இல்லை சட்டபொத்தான்களை கழற்றினால் போதும் காற்று வாங்க , அடை மழையில் நனைய நேரிட்டால், ஒதுங்கும் கடைகளில் குளிருக்கு இதமாய் தேநீர் பருகலாம், ஒப்புதல் எதுவும் தேவையில்லை நண்பனின் அறைக்கு நடுநிசியில் போக, தலைவலியோடு வீடு திரும்புகையில் சூடான காபி கிடைக்கும் வலியின் வீரியம் குறைக்க , அவசரங்களில் அடுக்கிய சட்டைகளை கலைத்தால் பரவாயில்லை திரும்ப அடுக்க அவசியமேதுமில்லை மேல்சட்டை அணியாமல் இருந்தால் போதும் முற்றும் துறந்தவனென தெரிவிக்க, வாந்தி, மயக்கம், வலிகள் எதுமின்றி பிள்ளைகள் பெயரின் முதல் எழுதாகலாம் ஆமாம்! ஆண்களை இருப்பது தான் எத்தனை சௌகர்யம் ! 23 Sankar Narayanan and 22 others 7 Comments 11 Shares Like Comment 7