புத்தாண்டு பிறந்ததாய் ஆர்பரிக்கிறார்கள் இவர்கள் யாவரும் ! நீ விட்டு சென்ற புள்ளியில் நின்று கொண்டிருக்கும் எனக்கு , நீ வந்த பிறகே பிறக்கும் புது ஆண்டு !
காற்றின் ஆட்டுவித்தலுக்கு இறைந்து கொண்டே இருக்கும் மரத்தை போல , ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் என்னை, காதல் நிறைந்த பார்வை ஒன்றால் , வாயடைக்க செய்து , மேலே கொஞ்சம் வெட்கத்தையும் படர செய்கிறாயே, அது எப்படி?